கவர் போட்டோவுக்காக இவ்ளோ கவர்ச்சியா.. குறைந்தது பட வாய்ப்பு.. போட்டோஷூட்டை நம்பும் பிரியங்கா!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா ஹர்பர் பஜார் எனும் பிரபல பேஷன் இதழின் அட்டைப் படத்துக்காக பயங்கர கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
ஹர்பர் பஜார் இதழில் இடம்பெற்றுள்ள தனது செம செக்ஸியான கவர் போட்டோக்களை நடிகை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார்.
அதிலும், அந்த கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் தனது உள்ளாடை தெரியும்படி செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
ஓவர் செக்ஸி
பாலிவுட், ஹாலிவுட் என மும்பைக்கும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் பறந்து பறந்து நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தி ஸ்கை இஸ் பிங்க் திரைப்படம் அவருக்கு பாராட்டுக்களையும் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில், மீண்டும் கவர்ச்சி ஏரியா பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
கவர் போட்டோ
பிரபல பேஷன் இதழான ஹர்பர் பஜார் இதழின் அட்டைப் படத்துக்காக சமீபத்தில், செம்ம செக்ஸியான போட்டோஷூட்டை நடிகை பிரியங்கா சோப்ரா நடத்தி உள்ளார். தலையில் கர்ச்சிப் கட்டியபடி பிகினியில் ஒரு புகைப்படம், லாங் கோட்டில், தொடையழகு தெரியும் படி ஒரு புகைப்படம் மற்றும் கருப்பு நிற ஸ்க்ரீன் துணியில் உச்சகட்ட கவர்ச்சியில் ஒரு புகைப்படமும் அட்டைப் படங்களாக உருவாகி உள்ளன.
லட்சக்கணக்கில் லைக்குகள்
பிரியங்கா சோப்ரா தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள, ஒவ்வொரு கவர் போட்டோவுக்கும் 7 லட்சம், 8 லட்சம் என ரசிகர்கள் லைக்குகளையும், ஆயிரக்கணக்கில் கமெண்ட்டுகளையும் தெறிக்க விட்டு வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா இன்ஸ்டா பக்கத்தில் 50 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள்.

படங்கள் குறைவு
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ராவுக்கு, சமீப காலமாக பாலிவுட்டில் அதிகளவிலான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தி ஸ்கை இஸ் பிங்க் படத்தைத் தொடர்ந்து, சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீரா மண்டி படத்தில் பிரியங்கா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரோ பிஸி
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா, தீபிகா, ரன்வீருடன் இணைந்து பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்திருந்தார். மீண்டும் சஞ்சய் லீலா பன்சாலி படத்திற்காக காத்திருக்கிறார். ஆனால், அவரோ, ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் கங்குபாய் காத்தியாவதி படத்தை இயக்கி வருகிறார். அதனால், இப்போதைக்கு, பிரியங்கா கை வசம் பாலிவுட்டில் புதிதாக படங்கள் ஏதும் இல்லை.

மேட்ரிக்ஸ் 4 என்ன ஆச்சு?
கீனு ரீவ்ஸ் நடிப்பில் உருவாக உள்ள மேட்ரிக்ஸ் 4 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. அந்த படத்திற்கான ஆயத்த பணிகள் மும்முரமக நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த படத்தில், பிரியங்கா சோப்ரா நடிக்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் சமூக வலைதளத்தில் கசிந்து வருகின்றன. பிரியங்கா சோப்ரா நடத்திய இறுதி முயற்சி தோல்வியை தழுவியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











