போதுமா.. முடியல.. தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் பிரியங்கா சோப்ரா!

சென்னை: பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. சீட்டடெல் வெப் தொடரில் படுக்கை அறை காட்சி முத்தக்காட்சிகளில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இவர் தற்போது, பொது நிகழ்ச்சிக்கு ஒவர் கவர்ச்சியில் வந்துள்ளார். அந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களில் மாஸ் காட்டிய பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார். இவர் தன்னை விட 15வயது சிறியவர் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் அண்மையில், வாடகைத்தாய் முறை மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

Priyanka chopra Nick Jonas photos

பிரியங்கா சோப்ரா: நடிகை பிரியங்கா சோப்ரா ஸ்டான்லி டூசி, லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் இணைந்து சீட்டடெல் வெப் தொடரில் நடித்திருந்தார். 6 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த வெப் தொடர், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இதில் அதிரடியான சண்டை காட்சி, படுக்கை அறை காட்சி, முத்தக்காட்சிகளில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

பாடகரான பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோன்ஸ் 'தி குட்ஹாப்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த டிரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட பிரியாங்க சோப்ரா, தனது மொத்த அழகையும் காட்டி படு கவர்ச்சியாக வலம் வந்துள்ளார். கண் கூசும் அளவிற்கு இருக்கும் அந்த போட்டோவை இணையத்தில் டிரெண்டாகி லைக்குகளை குவித்து வருகிறது. இன்னும் சில ரசிகர்கள் பொது நிகழ்ச்சியில் இப்படியான என கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஆவலாக இருக்கிறேன்: பிரியாங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவர் நடித்திருக்கும் 'தி குட்ஹாப்' டிரைலரைப் பார்த்து அவரை வெகுவாக பாராட்டி உள்ளார். அதில், இந்த அழகான, அழுத்தமான, மனதை த் தொடும் திரைப்படத்தை காண என்னால் காத்திருக்க முடியவில்லை என்றும், நான் சற்று பாரபட்சமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிக் ஜோனஸ் தனித்துவமானவர் என்றார்.

பிரியங்கா சோப்ரா தற்போது தி ப்ளஃப் படத்தில் ஃபிராங்க் ஈ ஃப்ளவருடன் இணைந்து இந்தப் படத்திற்காகப் பணி வருகிறார். மேலும், ஜான் சீனா நடிக்கும் 'ஹெட்ஸ்ட் ஸ் ஆப் ஸ்டேட்' என்ற படத்தில் நடித்துத் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X