வாவ்.. மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நடிக்க தயாராகும் பிரியங்கா சோப்ரா.. அந்த தாராளம் அதுக்குத்தானா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: கிராமி விருது விழாவில் தனது முன்னழகு முழுவதும் தெரியும் விதமாக செம்ம செக்ஸியான உடையணிந்து போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா, மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நடிக்க போகிறாராம்.

உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த மேட்ரிக்ஸ் படங்களின் மூன்று பாகங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், விரைவில் உருவாகப் போகும் மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நடிக்க இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் பிரியங்கா.

பாலிவுட் டு ஹாலிவுட்

பாலிவுட் டு ஹாலிவுட்

தளபதி விஜய் நடிப்பில் கோலிவுட்டில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களான பேவாட்ச் மற்றும் எ கிட் லைக் ஜேக் படங்களில் நடித்துள்ளார்.

மாடலிங்

மாடலிங்

ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் அதீத ஆர்வம் கொண்டவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கேன்ஸ் விருது விழா, ஆஸ்கர், கோல்டன் குளோப் மற்றும் கிராமி விருது விழா என பல வெளிநாட்டு விருது விழாக்களுக்கு செம்ம செக்ஸியான உடைகளை அணிந்து ஃபேஷன் மங்கையாக பிரியங்கா சென்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

லாங் ஓப்பன் டிரெஸ்

லாங் ஓப்பன் டிரெஸ்

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கிராமி விருது விழாவுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா, லாங் ஓப்பன் டிரெஸ் அணிந்து தனது முன்னழகு முழுவதும் தெரியும் படி சென்று, உலக ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். பிரியங்கா சோப்ராவின் லாங் ஓப்பன் டிரெஸ் பாலிவுட்டில் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.

மேட்ரிக்ஸ்

மேட்ரிக்ஸ்

1999ம் ஆண்டு வெளியான மேட்ரிக்ஸ் படம் உலகளவில் டெக் ரீதியான படங்களில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. இயக்குநர் லானா வச்சோவ்ஸ்கி இயக்கிய மேட்ரிக்ஸ் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் நடித்து அசத்தியிருந்தார். மேலும், மேட்ரிக்ஸ் படங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகி உலகளவில் ரசிகர்களை ஈட்டியுள்ளது.

மேட்ரிக்ஸ் 4ம் பாகம்

மேட்ரிக்ஸ் 4ம் பாகம்

தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன் என்ற பெயரில் 2003ம் ஆண்டு வெளியான மேட்ரிக்ஸ் மூன்றாம் பாகத்தை தொடர்ந்து சுமார் 17 ஆண்டுகள் கழித்து மேட்ரிக்ஸ் படத்தின் 4ம் பாகத்தை இயக்க இயக்குநர் லானா வச்சோவ்ஸ்கி முடிவெடுத்துள்ளார். இந்த பாகத்திலும் கீனு ரீவ்ஸ் நாயகனாக நடிக்கிறார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பிரியங்கா சோப்ரா முயற்சி செய்து வருவதாகவும், இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

டிரிப்பிள் எக்ஸ் 3 படத்தில் நாயகியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வின் டீசல் நடிக்கும் டிரிப்பிள் எக்ஸ் 4ம் பாகத்திலும் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், பிரியங்கா சோப்ராவின் மேட்ரிக்ஸ் 4ம் பாகம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் இரு நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X