Priyanka Chopra: காலில் பலத்த காயம்.. பூண்டைத் தேய்க்கும் பிரியங்கா சோப்ரா.. ட்ரெண்டாகும் வீடியோ!

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போது தமிழ் சினிமாவில் நடித்து உலகப் புகழ்பெற்ற சினிமா பிரபலங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளாலாமல் இல்லை. அந்த வகையில் தமிழில் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா தனது அயராத உழைப்பால் ஹாலிவுட்டில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருகின்றார். ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தபோது பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவைவிட அவரது கணவர் ஜோனஸ் 10 வயது சிறியவர். பிரியங்கா ஜோன்ஸ் தம்பதியருக்கு மால்டி என்ற மகள் இருக்கிறார். இவர் தற்போது தி பிளஃப் படத்தின் படப்பிடிபிற்காக அஸ்திரேலியாவில் உள்ளார். படப்பிடிப்பின் நடுவே எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிற்குச் சென்று அங்கு பிரபலமான நடிகையாக இருந்தவர் பிரியங்கா சோப்ரா. மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த பிரியங்கா கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து பிரியங்கா சோப்ராவின் மீது பலரது கவனம் திரும்பியது. மேலும் சினிமாவில் நுழைந்து ஒரு கலக்கு கலக்குவார் என்றும் அப்போதைய பத்திரிகைகள் எழுதின.

Priyanka Chopra

தமிழன்: அழகிகளை வாழவைக்கும் தமிழ் சினிமா உலக அழகியை வாழவைக்காதா என்ன என்பதற்கு இணங்க, முதல்முதலாக விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தின் மூலம் வசூலை அள்ள நினைத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜிவி, உலக அழகி பட்டம் வென்று ஃபிரஸ்ஸாக இருந்த இருந்த பிரியங்காவை ஹீரோயினாக தேர்வு செய்தார். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பிரியங்கா சோப்ராவுக்காகவே குத்து பாடல்கள் வைக்கப்பட்டது. இன்றைய அளவுக்கு அப்போது தமிழ் சினிமா கவர்ச்சியான பாடல்களை உருவாக்காத கால கட்டம் என்பதால் பிரியங்கா சோப்ராவின் அழகு பலருக்கும் தெரியாமல் போனது.

Priyanka Chopra

பாலிவுட்டில் பிரியங்கா: தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தாலும் அதன் பிறகு சிலபல காரணங்களால் தமிழில் அவர் நடிக்கவே இல்லை. அவர் 2003ஆம் ஆண்டு வெளியான தி ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் தி ஸ்பை என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக கான்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் முன்னணி நடிகையாக மாறினார் ப்ரியங்கா.

Priyanka Chopra

பாலிவுட் டூ ஹாலிவுட்: பாலிவுட்டில் கலக்கிய ப்ரியங்கா சோப்ரா குவாண்ட்டிகோ என்ற தொடர் மூலம் ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் தனது திறமையை அவர் நிரூபித்ததால் ஹாலிவுட்டிலேயே தற்போது செட்டில் ஆகிவிட்டார். மேலும் நிக் ஜோனஸ் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு மால்டி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பிரியங்கா கடைசியாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

Priyanka Chopra

பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ: இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்தப் வீடியோவில் பிரியங்கா சோப்ரா தனது கால்களில் அடிபட்டதைக் காட்டுகின்றார். மேலும் காலில் பூண்டினைத் தேய்க்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பிரியங்கா இப்போது தி பிளஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தில் நடித்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே அவரது கழுத்தில்படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Priyanka Chopra

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X