நச்சென்று இச்சொன்று தந்தாயே: நிக் ஜோனஸ் ஹேப்பி அண்ணாச்சி
Recommended Video

சென்னை: பிரியங்கா சோப்ரா பொது இடத்தில் கொடுத்த முத்தக் காட்சி வைரலாகிறது.
அழகான மஞ்சப்புறா அதன்கூட ஜோடிப்புறா என்பதுபோல் பிரியாங்கா சோப்ராவும் அவருடைய காதலர் நிக் ஜோனஸும் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்த விழா மும்பையில் நடைபெற்றபோது மும்பையே களைகட்டியது. அதற்கு முன்பு பிரியங்காவின் 36 வது பிறந்தநாளில் லண்டனில் வைத்து அழகாக தன் காதலை வெளிப்படுத்தியிருந்தார் நிக்.
நிக் ஜோனஸின் பிறந்தநாளன்று திருமணம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த தேதி தள்ளிப்போயுள்ளதாகக் கூறப்படுகிறது. யு எஸ் ஓபன், நியூயார்க் பேஷன் வீக் என நிக்குடன் அமெரிக்காவை வட்டமடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. தற்போது இருவரும் கலிபோர்னியாவில் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று 26 வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிக் ஜோனஸை ஆரத் தழுவி முத்தமிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெறிக்க விட்டார். பிறந்தநாள் பரிசாக தன்னுடைய அன்பு முத்தத்தை உரித்தாக்கியுள்ளார் பிரியங்கா.
இந்த கேன்டிட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த புகைப்படங்களுக்கு சில மணி நேரங்களில் 15 லட்சம் லைக்குகள் கிடைத்தது.
பிரியங்கா முத்தம் கொடுத்த போட்டோவின் கேப்ஷன், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி!".


Click it and Unblock the Notifications