பிரியங்கா சோப்ரா விபத்தில் சிக்கினாரா?.. ரத்த காயத்துடன் வெளியான போட்டோ.. பதறிய ரசிகர்கள்!
லண்டன் : பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முகத்தில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பிரியங்கா சோப்ராவிற்கு என்ன ஆச்சு அவர் விபத்தில் சிக்கினாரா ? என்றும் முகத்தில் என்ன காயம் என்றும் ரசிகர்கள் பதறியபடி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரியங்கா சோப்ராவின் இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து பலரும், அவர் நலம் பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பிரியங்கா சோப்ரா
பாலிவுட் என்றாலே சற்று என்று நம் நினைவுக்கு வரும் நடிகை பிரியங்கா சோப்ரா தான். பாலிவுட்டிற்கு ஏராளமான நடிகைகள் வந்தாலும், இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை பிரபலமாக உள்ளார்.

நிக் ஜோன்ஸை மணந்தார்
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் பிரபலமான பிரியங்கா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்து இருந்தார். டாப் ஹீரோயினாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோன்ஸை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேரி சோப்ரா ஜோனஸ்
பிரியங்கா மற்றும் ஜோனஸ் தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலமாக கடந்த ஜனவரி குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என்று பெயர்வைத்துள்ளார். பிரியங்கா அமெரிக்காவில் செட்டிலானாலும் நமது கலாச்சாரத்தை மறக்கவில்லை என பிரியங்காவின் தீவிர ரசிகர்கள் அவரை பாராட்டினர்.

ரத்தம் சொட்ட சொட்ட
இந்நிலையில்,நடிகை பிரியங்கா சோப்ரா மூக்கு மற்றும் உதடுகளில் இருந்து ரத்தம் சொட்ட, முகம் முழுவதும் ரத்தக்கறையுடன் பலத்த காயமடைந்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு என பதறிப்போயினர். ரசிகர்கள் அந்த புகைப்படத்தை சோகத்துடன் பார்த்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தலைப்பைப்பார்த்து இது ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்டது என்பதை அறிந்து பெருமூச்சு விட்டனர். இருப்பினும் இணையத்தில் பிரியங்கா சோப்ரா விபத்தில் சிக்கிவிட்டார் என்பது போல வதந்தி பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











