கண்ணை இழந்திருப்பேன்.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்.. பிரியங்கா சோப்ரா கொடுத்த ஷாக்
மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படம் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்தார். அந்த சமயத்தில் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவைவிட ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மால்டி என்ற மகள் இருக்கிறார். பிரியங்கா இப்போது ராஜமௌலி - மகேஷ்பாபு இணைந்திருக்கும் படத்திலும், ஹாலிவுட்டில் Heads of State படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிரியங்கா சோப்ரா. மாடலிங்கில் நுழைந்த அவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். அதிலிருந்து பிரியங்கா சோப்ராவின் மீது பலரது கவனம் விழுந்தது. மேலும் சினிமாவில் நுழைந்து பெரும் ரவுண்டு வருவார் என்றும் கணிக்கப்பட்டது.
விஜய் படத்தில் பிரியங்கா சோப்ரா: அதன்படி முதல்முதலாக விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தை கூடுதல் ஸ்டார் வேல்யூவுடன் கொடுக்க நினைத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜிவி, மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்று சென்சேஷனலாக இருர்ந்த பிரியங்காவை ஹீரோயினாக தேர்வு செய்தார். படம் சுமாரான ஹிட் என்றாலும் உலக அழகி நடித்திருக்கிறார் என்ற பெரும் விளம்பரம் அந்தப் படத்துக்கு பிரியங்கா சோப்ரா மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் பிரியங்கா: தமிழ் சினிமாவில் தனது கரியரை ஆரம்பித்தாலும் அதன் பிறகு தமிழில் அவர் நடிக்கவே இல்லை. அவர் 2003ஆம் ஆண்டு தி ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் தி ஸ்பை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக முன்னணி நடிகையாக மாறினார் பிரியங்கா.
ஹாலிவுட்டிலும் வெற்றி: பாலிவுட்டில் கலக்கிய பிரியங்கா சோப்ரா குவாண்ட்டிகோ என்ற தொடர் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதித்தார். அங்கும் தனது திறமையை அவர் நிரூபித்ததால் ஹாலிவுட்டில் செட்டில் ஆனார். மேலும் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அவர் கடைசியாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்தியாவிலிருந்து ஹாலிவுட் சென்று வெற்றிக்கொடி நாட்டிய வெகு சிலர்களில் பிரியங்கா முதன்மையானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
இப்போதைய படங்கள்: பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டில் Heads Of State என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படமானது ஜூலை இரண்டாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் ஜான் சீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தவிர்த்து தெலுங்கில் உருவாகும் ராஜமௌலி - மகேஷ்பாபு இணைந்திருக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பிரியங்காவின் பேட்டி: அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் படத்தின் ஷூட்டிங்கில் ஒரு விபத்து நடந்தது. அந்த விபத்தில் நான் எனது கண்ணை இழந்திருப்பேன். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் நல்லவேளை எதுவும் ஆகவில்லை என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











