கேட்காமல் "கிளிக்"கினால் எப்படி... பிரியங்கா சோப்ரா கோபம்

மும்பை: ரசிகர்கள் தனது அனுமதியைப் பெறாமலேயே புகைப்படம் எடுப்பதாகவும், அது நாகரீகம் அல்ல என்றும் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

நடிகர் நடிகையர் என்றால் ரசிகர்களிடம் ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. கையில் கிடைக்கும் கேமரா அல்லது செல்போன் கேமராவில் கிளிக்கி விடுகின்றனர் பார்த்தவுடன்.

இதைத்தான் தற்போது குறை சொல்லியுள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்து டிவிட்டரிலும் பொங்கியுள்ளார் பிரியங்கா.

அதிருப்தி...

அதிருப்தி...

போகும் இடமெல்லாம் தனக்கு இப்படிப்பட்ட ரசிகர்களால் தர்மசங்கடம் ஏற்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

எல்லாம் பிளாஷ் மயம்...

எல்லாம் பிளாஷ் மயம்...

எங்கு போனாலும் கையில் உள்ள கேமரா, செல்போன் உள்ளிட்டவற்றால் தன்னைச் சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுக்கிறார்கள் என்று அலுத்துக் கொண்டுள்ளார்.

முரட்டுத்தனமான செயல்...

முரட்டுத்தனமான செயல்...

இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில், இப்படி அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பது மிகவும் முரட்டுத்தனமான செயல்.

அனுமதி கேட்க வேண்டும்...

அனுமதி கேட்க வேண்டும்...

பொது இடத்தில் நாம் சாப்பிடும்போதும், அமர்ந்திருக்கும்போதும், தூங்கும்போதும் திடீரென வந்து நமது அனுமதியைக் கூட கேட்காமல் புகைப்படம் எடுப்பது என்ன பழக்கம். அனுமதி கேட்க வேண்டாமா என்று கேட்டுள்ளார் பிரியங்கா.

கோபம் மட்டும்....

கோபம் மட்டும்....

பல நேரங்களில் இப்படி புகைப்படம் எடுப்போரை பிரபலங்கள் பளார் என அறைவது உண்டு. நல்லவேளை டிவிட்டர் மூலம் கோபத்தைக் காட்டியதோடு விட்டாரே பிரியங்கா.. அவரைப் பாராட்டலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X