ஆசியாவின் செக்சியான பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு முதலிடம்

By Siva

மும்பை: ஆசியாவின் கவர்ச்சிகரமான 50 பெண்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற நாளிதழ் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் யார் என்று ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தி பட்டியலை வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

50 பெயர் அடங்கிய அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள சிலரை பார்ப்போம்,

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

ஆசியாவின் கவரச்சிகரமான பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பாலிவுட் நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா. முன்னதாக கடந்த 2012ம் ஆண்டிலும் பிரியங்கா தான் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இந்த ஆண்டு 4வது இடத்தில் உள்ளார்.

த்ரஸ்தி

த்ரஸ்தி

பிரபல டிவி நடிகை த்ரஸ்தி தாமி இரண்டாவது இடத்திலும், மற்றொரு டிவி நடிகையான சனாயா இரானி 3வது இடத்திலும் உள்ளனர். டிவி ரியாலிட்டி நடிகை கவ்ஹர் கான் 5வது இடத்தில் உள்ளார்.

தீபிகா

தீபிகா

ஆசியாவின் கவர்ச்சிகரமான 50 பெண்கள் பட்டியலில் தீபிகா படுகோனே(6), கரீனா கபூர்(8), சோனம் கபூர்(9), ஷ்ரத்தா கபூர்(17), ஆலியா பட்(24), மஹிரா கான்(34), கங்கனா ரனௌத்(38), அனுஷ்கா சர்மா(47), கனிகா கபூர்(50) ஆகிய இந்திய நடிகைகளும் உள்ளனர்.

மாதுரி தீக்சித்

மாதுரி தீக்சித்

ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள அதிக வயதுள்ள நடிகை மாதுரி தீக்சித். 47 வயதாகும் அவருக்கு பட்டியலில் 28வது இடம் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X