காதலர் நிக்கை மணந்த ப்ரியங்கா சோப்ரா: ஆரம்பமே பிரச்சனையா?
ஜோத்பூர்: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோனஸை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் நடைபெற்றது.
பிரமாண்டம்
ப்ரியங்கா, நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் மெஹந்தி நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வானவேடிக்கை
ப்ரியங்கா, நிக் திருமணம் முடிந்த பிறகு வானவேடிக்கை விடப்பட்டது. அதை பார்த்து பிரமிக்காதவர்களே இல்லை. இந்நிலையில் அதே வான வேடிக்கையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
ஆஸ்துமா
தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதை குறைத்துக் கொண்டு மாசை குறைத்து ஆஸ்துமா இருக்கும் என்னை போன்றோருக்கு உதவுங்கள் என்று கூறிய அதே ப்ரியாங்காவின் திருமணத்தில் மட்டும் வானவேடிக்கை விடலாமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ப்ரியங்கா
நிக் உங்களின் மனைவி ப்ரியங்கா செய்தது சரியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் ப்ரியங்காவை கிண்டல் செய்துள்ளனர், மேலும் சிலர் அவரை விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











