விளம்பரப் படத்திற்கு ரூ.11 கோடி, படத்திற்கு ரூ.10 கோடி: பிரியங்கா சோப்ரா காட்டில் பண மழை

By Siva

மும்பை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே இந்தியில் படமாக்கப்பட்டு கடந்த 5ம் தேதி ரிலீஸானது. படத்தில் பிரியங்கா சோப்ரா மேரி கோமாக நடித்துள்ளார்.

பிரியங்காவின் நடிப்பு மிகவும் அருமை என்று விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை தெரிவித்துள்ளனர்.

வசூல்

வசூல்

மேரி கோம் படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ.8 கோடி வசூல் செய்தது. படத்தின் வசூலுக்கும், ஹீரோவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மேரி கோம் நிரூபித்துள்ளது.

ரூ.40 கோடி

ரூ.40 கோடி

மேரி கோம் படம் இதுவரை ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் இன்னும் கூட்டம் குறையாமல் உள்ளதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

கிரண் பேடி

கிரண் பேடி

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகிறார்களாம். அதில் கிரண் பேடியாக பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

சம்பளம்

சம்பளம்

கிரண் பேடியாக நடிக்க பிரியங்காவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்த தொகை பாலிவுட்டில் எந்த ஹீரோயினுக்கும் இதுவரை அளிக்கப்படாதது ஆகும்.

பிரியங்கா

பிரியங்கா

மேரி கோம் படம் ரிலீஸான அன்று தான் பிரியங்காவுக்கு கிரண் பேடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். இது குறித்து பிரியங்காவிடம் கேட்டால், உறுதியானதும் அறிவிப்பு வெளியிடுகிறேன் என்றார்.

விலை மதிப்பற்றவள்

விலை மதிப்பற்றவள்

கிரண் பேடி படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளமாமே என்று கேட்டதற்கு, நான் விலை மதிப்பற்றவள் என்று கூறி சிரித்தார் பிரியங்கா.

விளம்பர படம்

விளம்பர படம்

ஏகப்பட்ட விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார் பிரியங்கா. இந்நிலையில் பிரபல பிராண்ட் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க அவருக்கு ரூ.11 கோடி சம்பளம் பேசியுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X