Priyanka Chopra - பாத்ரூமுக்குள்தான் நான் அப்படி செய்வேன் - ப்ரியங்கா சோப்ரா ஓபன் டாக்
மும்பை: Priyanka Chopra (ப்ரியங்கா சோப்ரா) நடிகை ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ரியங்கா சோப்ரா. மாடலிங்கில் நுழைந்த ப்ரியங்கா சோப்ரா கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். அதிலிருந்து ப்ரியங்கா சோப்ராவின் மீது பலரது கவனம் விழுந்தது. மேலும் சினிமாவில் நுழைந்து பெரும் ரவுண்டு வருவார் என்றும் கணிக்கப்பட்டது.

தமிழன் ப்ரியங்கா சோப்ரா: அதன்படி முதல்முதலாக விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமானார் ப்ரியங்கா சோப்ரா. தமிழன் படத்தை கூடுதல் ஸ்டார் வேல்யூவுடன் கொடுக்க நினைத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜிவி மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்று சென்சேஷனலாக இருர்ந்த ப்ரியங்காவை ஹீரோயினாக தேர்வு செய்தார். படம் சுமாரான ஹிட் என்றாலும் உலக அழகி நடித்திருக்கிறார் என்ற பெரும் விளம்பரம் அந்தப் படத்துக்கு ப்ரியங்கா சோப்ரா மூலம் கிடைத்தது.
பாலிவுட்டில் ப்ரியங்கா: கோலிவுட்டில்தான் தனது கேரியரை ஆரம்பித்தாலும் அதன் பிறகு ஏதோ காரணங்களால் தமிழில் அவர் நடிக்கவே இல்லை. அவர் 2003ஆம் ஆண்டு தி ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் தி ஸ்பை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக முன்னணி நடிகையாக மாறினார் ப்ரியங்கா.
பாலிவுட் டூ ஹாலிவுட்: பாலிவுட்டில் கலக்கிய ப்ரியங்கா சோப்ரா குவாண்ட்டிகோ என்ற தொடர் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதித்தார். அங்கும் தனது திறமையை அவர் நிரூபித்ததால் ஹாலிவுட்டில் செட்டில் ஆனார். மேலும் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இந்தியாவிலிருந்து ஹாலிவுட் சென்று வெற்றிக்கொடி நாட்டிய வெகு சிலர்களில் ப்ரியங்கா முதன்மையானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.

பாத்ரூமுக்கள் அப்படி செய்வேன்: இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நான் அமெரிக்காவுக்கு சென்ற புதிதில் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்டேன். மிகவும் பயந்துகொண்டே நாட்களை கழித்தேன். உணவுப் பண்டங்கள் வாங்கிக்கொண்டு யாரும் பார்க்காமல் பாத்ரூமுக்குள் சென்று தின்றுவிட்டு கிளாஸ் ரூமுக்கு சென்றுவிடுவேன். அத்தோடு அந்த நாட்களில் வேறு யாருடனும் நான் சேர்ந்து எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை.
பயங்களை ஒதுக்கினேன்: அத்தனை பயங்களையும் ஒதுக்கிவிட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். சுமார் 4 வாரங்கள் அங்கு ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாக கவனித்தேன். அதன் பின்னர் எனக்குள் தைரியம் வந்தது. பள்ளியில் இருக்கும் இதர மாணவர்களோடு நட்புக்காக என்னை மாற்றிக்கொண்டேன். டேட்டிங் செல்வது, லேட்நைட் பார்ட்டிகள் இதெல்லாம் எங்கள் குடும்பத்தில் அனுமதிக்க மாட்டார்கள் என்று நண்பர்களுக்கு புரியும்படி எடுத்து கூறினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











