தீபிகாவை ஓரங்கட்டும் ப்ரியங்கா: தெரிந்து செய்கிறாரா, தெரியாமல் செய்கிறாரா?
Recommended Video

மும்பை: இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மும்பை திரும்பியுள்ளனர்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவின் திருமணம் இத்தாலியில் நடந்தது. இதையடுத்து இருவரும் நேற்று மும்பைக்கு திரும்பி வந்தனர்.
இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தனர்.

மீடியா
ரன்வீர் மற்றும் தீபிகா தங்கள் வீட்டிற்கு முன்பு வந்து நின்று மீடியாவுக்கு நன்றி தெரிவித்தனர். ரன்வீர் சிங் தனது கையில் வைத்துள்ள மருதாணியில் தீபிகாவின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து ஷாருக்கான் பங்களா போன்று பெரிய பங்களா ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளனர்.

ரன்வீர்
தீபிகா, ரன்வீர் மும்பை திரும்பி வந்த செய்தி வெளியான வேகத்தில் ப்ரியங்கா சோப்ரா தனது அம்மா மதுவுடன் பாரீஸுக்கு சென்ற செய்தி வெளியாகி அனைவரின் கவனமும் அவர் மீது திரும்பிவிட்டது. மீடியா, ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் தீபிகா, ப்ரியங்கா இடையே போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

30 மில்லியன்
அடடே, அம்மாவும் பொண்ணும் பாரீஸில் இருக்கிறார்களா என்று பேசத் துவங்கிய வேகத்தில் ப்ரியங்கா பற்றி மேலும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 30 மில்லியனை தொட்டுள்ளது. ஆக, ப்ரியங்கா பற்றி தான் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின்றன.

வாடகை
ப்ரியங்கா சோப்ராவின் திருமணம் நடைபெற உள்ள ஜோத்பூர் அரண்மனையின் ஒரு நாள் வாடகை ரூ. 43 லட்சமாம். தீபிகாவின் திருமணத்தை விட நடக்கப் போகும் ப்ரியங்காவின் திருமணம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











