நடிகை ஆசையாய் பிகினி போட்டோ வெளியிட்டால் நெட்டிசன்ஸ் என்ன சொல்றாங்கன்னு பாருங்க

By Siva

மும்பை: நடிகை ப்ரியங்கா சோப்ரா ஆசை, ஆசையாய் வெளியிட்ட பிகினி புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்துள்ளார்கள்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா கடந்த 18ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கணவர் நிக் ஜோனஸ் மற்றும் குடும்பத்தாருடன் மயாமியில் கொண்டாடினார். நள்ளிரவில் பிரமாண்ட கேக் கொடுத்து அசத்தினார் நிக்.

இதையடுத்து அவர்கள் படகில் சென்று பொழுதை போக்கினார்கள்.

ப்ரியங்கா

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை ப்ரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பிங்க் நிற பிகினியில் ப்ரியங்கா தனது கணவரை காதல் பொங்க பார்த்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ அவரை கிண்டல் செய்துள்ளார்கள். ஒரு சின்னப்புள்ளையை ஆன்ட்டி கெடுக்கிறார் என்று கலாய்த்துள்ளனர். நிக் ப்ரியங்காவை விட 10 வயது சின்னவர் என்பதால் அவரை அடிக்கடி கிண்டல் செய்கிறார்கள்.

கிண்டல்

காதலுக்கு மனம் தான் முக்கியம், வயது இல்லை என்கிறார் ப்ரியங்கா. ஆனால் இந்த சமூக வலைதளவாசிகளோ நேரம் கிடைக்கும்போது எல்லாம் ப்ரியங்கா, நிக் இடையேயான வயது வித்தியாசத்தை காரணம் காட்டி கிண்டல் செய்கிறார்கள். 10 ஆண்டு சவாலின்போது கூட ப்ரியங்காவை கேவமலாக கயாத்தனர். அதை பார்த்து பாடகி சின்மயி கூட கொந்தளித்தார்.

குங்குமம்

நள்ளிரவு கேக் வெட்டிய பிறகு ப்ரியங்கா தனது கணவருக்கு மது கொடுக்க, பதிலுக்கு அவர் கொடுக்கும் புகைப்படம் வெளியானது. அதை பார்த்தவர்கள் நல்ல குடும்பம், குடியும், குடித்தனமுமாக இருக்கிறார்கள் என்று நக்கல் செய்தனர். சிலரோ ப்ரியங்காவின் நெற்றியில் குங்குமம் இருந்ததை பார்த்து பாராட்டினார்கள். சில குசும்புக்காரர்களோ, புகைப்படம் வெளியாகும் என்று தெரிந்து தான் ப்ரியங்கா குங்குமம் வைத்திருந்தார் என்கிறார்கள்.

சிகரெட்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ப்ரியங்கா சிகரெட் பிடித்தது சர்ச்சையானது. தனக்கு ஆஸ்துமா உள்ளது என்று கூறிய ப்ரியங்கா தம்மடித்ததை பார்த்த ரசிகர்கள் அவர் நாடகமாடுவதாக கூறினார்கள். இது குறித்து ப்ரியங்காவின் தங்கையும், நடிகையுமான பரினீத்தியிடம் கேட்டதற்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை. ப்ரியங்காவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அமெரிக்கா சென்றார் பரினீத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X