நீருக்குள் சூடேற்றும் பிரியங்கா சோப்ரா… மனசுல என்ன இருக்கு?
மும்பை: நீச்சல் குளத்தின் ஜில்லென்ற நீருக்கு அடியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. அந்த படத்திற்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கம்தான் புரியாத புதிராக இருக்கிறது.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஜோயா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக இப்போது பார்சிலோனா நகரில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார்.
மும்பையில் தான் இல்லாவிட்டாலும், தனது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரும் விசயங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டு உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

கவர்ச்சியில் கலங்கடித்த பிரியங்கா
பிரியங்கா சோப்ரா சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் வலை தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், பிரியங்கா சோப்ரா நீருக்கு அடியில் இருக்கிறார். அவர் நீரினுள் இருப்பது போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தாலும், பார்ப்பவர்களை சூடேற்றும் வகையில் அந்தப் படம் அமைந்துள்ள என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

ஆழமான வார்த்தைகள்
அந்த படத்திற்கு அவர், இந்தி மொழியில் உள்ள சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி உள்ளார். இந்த தலைப்புடன் கூடிய புகைப்படத்தை வெளியிடும்பொழுது அவர் என்ன நினைத்து இருந்தார் என்பது புதிரான ஒன்றாக உள்ளது.

பிரியங்கா சொல்வது என்ன?
படத்தின் பாடல் வரிகளை அவர் வெளியிட்டு உள்ளார் என ரசிகர்கள் கருதினாலும், நீருக்குள் இருப்பது போன்ற புகைப்படத்திற்கு காட்சி தரும்போது தோன்றிய தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளாரா? என்றும் தெரியவில்லை.

ரசிகர்கள் காத்திருப்பு
நடிப்பில் கவர்ச்சிப் புயலாக இருந்தாலும் கவிதைகளை எழுதி அழகான குரலில் பாடவும் செய்யும் பிரியங்கா தனது புகைப்படத்திற்கு தெரிவிக்கும் கருத்து என்ன என்பதை அறிய அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











