வணக்கத்துக்கு மாறுங்க.. இதோ பிரியங்காவும் சொல்லிட்டாங்க.. கொரோனாவில் இருந்து தப்பிக்க புது வழி!
சென்னை: வணக்கம் சொல்லி வரவேற்பது இந்தியர்களின் பாரம்பரியமாகவும், தமிழர்களின் வாழ்க்கை முறையாகவும் திகழ்கிறது.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், தற்போது, வெளிநாடுகளில், கட்டிப் பிடித்தோ, கைகளை குலுக்கியோ வரவேற்பதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா, வணக்கம் சொல்லி இனி வரவேற்க உலகம் பழகிக் கொள்ளுதல் அவசியம் என்ற பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகமே ஷாக்
கொரோனா வைரஸ் தாக்குதலை பிரபலங்கள் சாதாரணமாக நினைத்து வந்த நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகரான டாம் ஹான்க்ஸ்க்கு அந்த வைரஸ் பரவியது, உலகத்தில் உள்ள பல பிரபலங்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பல நாடுகளில் ஷூட்டிங் நடத்தவும் படங்களை ரிலீஸ் செய்யவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

வணக்கத்துக்கு மாறுங்க
பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, வணக்கத்துக்கு மாறுங்க, என்றும், பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது, பிரியங்கா சோப்ரா வணக்கம் வைத்த புகைப்படங்களை மாஷ்-அப் வீடியோவாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க இது ஒரு வழி என்றும் கூறியுள்ளார்.

நல்ல ஐடியா
இந்தியர்களின் பாரம்பரியமான வணக்கம் வைக்கும் முறைக்கு உலக நாடுகள் மாறி வருவது நல்ல விஷயம் தான் என்றும், தொற்று நோயாக பரவும் கொரோனா வைரஸ் இடம் இருந்து தற்காத்துக் கொள்ள இது ஒரு நல்ல ஐடியா என்றும் பிரியங்காவின் ட்வீட்டுக்கு கீழே அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஹோலி கொண்டாட்டம்
ஆனால், சில நாட்களுக்கு முன்பு தான் நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தியாவில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஹோலி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைரலாக்கினார். வணக்கத்துக்கு மாறுங்க என தற்போது, பிரியங்கா சொல்லியுள்ள நிலையில், ஹோலி கொண்டாடும் போது இது உங்களுக்கு தெரியவில்லையா என்றும் சிலர் கேட்டு வருகின்றனர்.
Recommended Video

வெளிநாட்டில் ஹோலி
மேலும், சமீபத்தில், அமெரிக்க டிவி சேனல் ஒன்றில், தொகுப்பாளர் ஜிம்மி ஃபாலன் முகத்தில் பிரியங்காவும், பிரியங்கா சோப்ராவின் முகத்தில் ஜிம்மி ஃபாலனும் மாற்றி மாற்றி கலர் பூசி ஹோலி கொண்டாடிய வீடியோ வைரலானது. மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்யும் முன், நீங்கள் முதலில் பாதுகாப்பாக இருங்க என்றும் ரசிகர்கள் பிரியங்காவிற்கே ஃப்ரீ அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











