போஸ்டருக்காக 'டாப்லெஸ்' போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா தங்கை
மும்பை: தான் நடிகையாக அறிமுகமாகும் ஜித் படத்தின் போஸ்டருக்காக நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை(கசின்) மனாரா என்ற பார்பி ஹன்டா டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கைகளான பரினீத்தி சோப்ரா, மீரா சோப்ரா(எ) நிலா ஆகியோர் நடிகைகளாக உள்ளனர். இந்நிலையில் பிரியங்காவின் மற்றொரு தங்கையான பார்பி ஹன்டாவும் நடிகையாகியுள்ளார்.
அவர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஜித் என்ற இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.

போஸ்டர்
ஜித் படத்தின் போஸ்டருக்காக பார்பி டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட்டில் போஸ்டர்களுக்காக ஆடைகளை துறப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

பெயர் மாற்றம்
மாதுரி தீக்சித்தின் தீவிர ரசிகரான அனுபவ் பார்பியின் பெயர் 'ம' என்ற எழுத்தில் துவங்க வேண்டும் என நினைத்து அதை மனாரா என்று மாற்றியுள்ளார். அதனால் இனி பார்பி மனாரா என்றே அழைக்கப்படுவார்.

மனாரா
மனாரா என்பது கிரேக்க வார்த்தையாம். அதன் பொருள் பளபளப்பு ஆகும். பார்பிக்கு தனது புதுப்பெயர் பிடித்துள்ளது.

சீரியல்
உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்றால் நான் டிவி சீரியல்களில் தான் நடிக்க வேண்டும் என்றார் மனாரா.

ஹாட்
எனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் எனக்கு பிரச்சனை இல்லை என்று தெரிவித்துள்ளார் மனாரா. பொண்ணு ஒரு முடிவோட தான் பாலிவுட் வந்திருக்கு போல.


Click it and Unblock the Notifications











