ஒண்ணும் புரியலையே.. ஒரே குழப்பமா இருக்கே.. இந்த பிகினி போஸில் பிரியங்கா சோப்ரா என்ன சொல்ல வராங்க?
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பிகினி உடையில் படுத்திருக்கும் ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு Expectation vs Reality என கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை குழப்பியுள்ளார்.
Recommended Video
இந்த லாக்டவுன் நேரத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் கணவர் நிக் ஜோனஸ் உடன் பொழுதை கழித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.
கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு, நிதி திரட்ட வீட்டிலேயே இருந்தபடி லைவ் நிகழ்ச்சிகள் என பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.

வீட்டிலேயே மெட் காலா
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் பிரசித்தி பெற்ற ஃபேஷன் ஷோவான மெட் காலா நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறாமல் போனது. கடந்த சில ஆண்டுகளாக மெட் காலாவில் வித்தியாசமான உடைகளில் கலந்து கொண்டு கலக்கிய பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு வீட்டிலேயே உறவினர் குழந்தையுடன் மேக்கப் போட்டு மகுடம் சூடி மெட் காலாவை கொண்டாடினார்.

2 மாதத்துக்கு பிறகு
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கடந்த 2 மாதங்களாக வீட்டிலேயே லாக்டவுனில் இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, 2 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக வீட்டில் இருந்து வெளியே சுற்றிப் பார்க்க கிளம்புகிறேன் என முகமூடியுடன் வெளியே வந்த புகைப்படத்தை கடந்த மே 12ம் தேதி பதிவிட்டு வைரலாக்கினார்.

கடந்த ஆண்டு கேன்ஸில்
மெட் காலாவை போல கேன்ஸ் திரைப்பட விழாவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நினைவுகளை கடந்த வாரம் பிரியங்கா தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்தார். படு கவர்ச்சியான உடையில் கேன்ஸ் விழாவில் பிரியங்கா கலந்து கொண்ட புகைப்படங்கள் மீண்டும் வைரலாகின.

நான் பாடல
இப்படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, 2 நாட்களுக்கு முன்னதாக, 2005ம் ஆண்டு வெளியான கரம் படத்தின் டின்கா டின்கா பாடல் காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அதன் நினைவுகளை அசை போட்டார். அந்த பாடலை கேட்ட பலரும் அப்போது, நானே பாடியதாக நினைத்தனர். ஆனால், என் குரலுக்கு இணையாக பிரபல பாடகி ஆலிஷா தான் அந்த பாட்டை பாடினார் என்றார்.

பிகினி போஸ்
இந்நிலையில், தற்போது பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் தனது புகைப்படத்தையும், முகத்தை துணியால் மூடியபடி ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டு Expectation vs Reality என்ற கேப்ஷனை கொடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரியங்கா சோப்ராவை ஹாட் பிகினியில் பார்த்த ரசிகர்கள் ரியாலிட்டியை விட Expectation நல்லா இருக்கு என வழிந்து வருகின்றனர்.

ரசிகர்கள் குழப்பம்
அழகு மட்டுமின்றி அறிவும் அதிகமாக இருக்கும் ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இப்போது ஏன் இந்த படங்களை பதிவிட்டு Expectation vs Reality என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஒண்ணுமே புரியலையே என பல ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். எல்லோரும் எதிர்பார்ப்பது இப்படி இருக்க வேண்டும் என்று, ஆனால், தான் தற்போது இப்படித்தான் மூடிக் கொண்டு இருக்கிறேன் என்பதை சூசகமாக சொல்கின்றாரா என சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











