மிஷ்கின் படத்துல வர மஞ்ச சேலை.. துப்பாக்கி வச்சிருந்தாலும் தொப்புளை காட்டும் பிரியங்கா சோப்ரா!
ஹைதராபாத்: எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் Globe Trotter படம் மிகப்பெரிய ஹைப்பை பெற்றிருக்கிறது. இந்தியாவின் பிரமாண்ட இயக்குநரும், தெலுங்கு திரையுகின் டாப் ஸ்டாரும் இணைவதால் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு இது. போதாக்குறைக்கு பிரியங்கா சோப்ராவும் இணைந்திருக்கிறார். இந்நிலையில் அவரது கேரக்டர் பெயரை வெளியிட்டிருக்கிறது படக்குழு.
ஆர்ஆர்ஆர் படம் பெற்ற வெற்றி ராஜமௌலியின் மார்க்கெட்டை மேற்கொண்டு உயரத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. உலக அளவில் கலக்கிய அந்தப் படத்துக்கு பிறகு யாருடன் இணையப்போகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அவர்களுக்கு எல்லாம் சர்ப்ரைஸ் தரும் விதமாக மகேஷ் பாபுவுடன் இணைந்திருக்கிறார். நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்த இந்தக் கூட்டணி இப்போது அமைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியே.
பிரமாண்ட படம்: இதற்கு முந்தையை படத்தின் வெற்றியை தக்க வைப்பதும், அதனை தாண்டி வசூலை எடுப்பதும் ராஜமௌலிக்கு இருக்கும் இரண்டு பொறுப்புகள். அவர் கொஞ்சம் சறுக்கினால்கூட பள்ளத்தில் விழுந்துவிட்டதாகவே பெரும்பாலானோர் சித்தரிப்பார்கள். அதன் காரணமாக இப்படத்தில் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைக்கிறார் பிரமாண்ட இயக்குநர்.

நட்சத்திர பட்டாளம்: இதில் வில்லனாக பிருத்விராஜ் நடிக்கிறார். கும்பா என்ற கேரக்டரை ஏற்றிருக்கும் அவர் இதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம். சில நாட்களுக்கு முன்பு அவரது கேரக்டர் தொடர்பான போஸ்டர் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆனது. அவரது லுக்கை பார்க்கும்போது நிச்சயம் மிரட்டும் வில்லனாக தனது கரியரில் சிறந்த கேரக்டரை ஏற்றிருக்கிறார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இவர் தவிர்த்து இன்னும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.
பிரியங்கா சோப்ரா: இவை அனைத்தையும் தாண்டி பிரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் கமிட்டாகியிருப்பது அனைவருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. ஏனெனில் தென்னிந்திய சினிமாவில் அவர் நடிப்பதை நிறுத்தியே இருந்தார். இத்தனைக்கும் அவர் திரைத்துறையில் அறிமுகமானது தென்னிந்திய சினிமாவான தமிழன் திரைப்படம். இத்தனை வருடங்கள் கழித்து அவர் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பதால் கண்டிப்பாக அவரது கேரக்டர் வலுவாக எழுதப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது.
கேரக்டர் பெயர்: இந்நிலையில் அவரது கேரக்டர் பெயரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி அவர் மந்தாகினி என்ற கேரக்டரை ஏற்றிருக்கிறார். வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் மஞ்சள் புடவை கட்டி கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது இந்தப் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











