கணவரை பிரிகிறாரா பிரபல நடிகை? அம்மா சொன்ன அதிரடி தகவல்.. வைரலாகும் பிரியங்கா சோப்ரா கமெண்ட்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் நிக் ஜோனஸ் பெயரை நீக்கிய நிலையில் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்களா? என்கிற கேள்வி நாடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

ஏற்கனவே நடிகை சமந்தா இதே போல நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை தூக்கிய நிலையில் கிளம்பிய விவாகரத்து வதந்திகள் கடைசியில் உண்மையாய் மாறி அதிர்ச்சி அளித்தன.

இந்நிலையில், இது தொடர்பாக நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

கணவர் பெயர் நீக்கம்

கணவர் பெயர் நீக்கம்

கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அடுத்த அடுத்த லெவலுக்கு சென்று வரும் நடிகை பிரியங்கா சோப்ரா திங்கட்கிழமை திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த கணவர் நிக் ஜோனஸின் சர் நேமான ஜோனஸை அதிரடியாக தூக்கி விட்டார். அது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் அவர் கொடுக்கவில்லை.

கணவரை பிரிகிறாரா

கணவரை பிரிகிறாரா

பிரியங்கா சோப்ரா ஜோனஸ் எனும் பெயர் திடீரென பிரியங்கா சோப்ராவாக மாறிய உடனே விவாகரத்து வதந்தி காட்டுத் தீ போல பரவியது. பிரியங்கா சோப்ரா ஏன் திடீரென கணவர் நிக் ஜோனஸ் பெயரை நீக்கினார். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்களா? என்ன பிரச்சனை? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

அம்மா விளக்கம்

அம்மா விளக்கம்

பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோனஸுக்கும் விரைவில் விவாகரத்து நடைபெற உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ராவிடம் இது தொடர்பாக கேட்கப்பட்ட போது இது முற்றிலும் தவறான ஒன்று. தேவையில்லாமல் விவாகரத்து வதந்தியை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அம்மா மது சோப்ராவின் பதிலை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் போட்ட கமெண்ட்டும் வைரலாகி வருகிறது.

கணவருக்கு கமெண்ட்

கணவருக்கு கமெண்ட்

பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் நேற்று இரவு செம கூலாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அதற்கு கீழ் நடிகை பிரியங்கா சோப்ரா போட்ட கமெண்ட்டும் ரசிகர்களை டோட்டலாக குழப்பி வருகிறது. "Damn! I just died in your arms..." உன்னிடத்தில் என்னை தொலைத்து விட்டேன் என கணவருக்கு காதலுடன் கமெண்ட் செய்து விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேட்ரிக்ஸ் 4

மேட்ரிக்ஸ் 4

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா பேவாட்ச் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். உலகளவில் பிரபலமான கீனு ரீவ்ஸின் மேட்ரிக்ஸ் 4ம் பாகத்திலும் அவர் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 22ம் தேதி அந்த படம் வெளியாகிறது. மேலும், ஃபர்கான் அக்தரின் இந்தி படமான ஜி லே ஜாரா படத்திலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். எல்லாம் ஓகே.. ஆனால், கணவர் பெயரை ஏன் நீக்கினேன் என்பதற்கு விளக்கம் கொடுப்பாரா பிரியங்கா சோப்ரா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X