மெட்காலாவை வீட்டிலேயே நடத்திய பிரியங்கா சோப்ரா.. யார் மகுடத்தை அணிவிக்கிறாருன்னு பாருங்க!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது வீட்டிலேயே மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியை சிம்பிளாக நடத்தியுள்ளார்.
Recommended Video
ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் மாடல் அழகிகள் பங்கு பெறும் உலகத்தின் பிரம்மாண்டமான ஃபேஷன் ஷோ மெட் காலா.
ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு வித்தியாசமான தீமுடன் மெட் காலா நடைபெறுவது வழக்கம்.

மெட் காலா ரத்து
ஆண்டுதோறும் மே மாதம் மெட் காலா எனும் ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் உலக பிரபலங்களுடன் இணைந்து நடிகை பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே போன்ற இந்திய நடிகைகளும் அதில் கலந்து கொள்வர். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மெட் காலா நடைபெறவில்லை.

மெட் காலாவில் பிரியங்கா
பாலிவுட் நடிகையாக அசத்தி வந்த பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஃபேஷன் பிரியையான பிரியங்கா சோப்ரா, மெட் காலா நிகழ்ச்சிக்கும், ஃபேஷன் உடைகளில் கலக்க தொடங்கினார். 2017ம் ஆண்டு, காக்கி கலரில் நீண்ட ஓவர் கோட் போன்ற உடையை அணிந்து நடிகை பிரியங்கா சோப்ரா மெட் காலா நிகழ்ச்சியை அலங்கரித்தார்.

2018ல்
2017ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா மெட் காலாவில் கலந்து கொண்டது இந்தியளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. பிரியங்கா சோப்ராவின் ஆடையை கிண்டல் செய்து மீம்ஸ்களும் பறந்தன. அதனை தொடர்ந்து 2018ம் ஆண்டு நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் ரெட் கலர் உடையில் நடிகை பிரியங்கா கலந்து கொண்டு தனது ஃபேஷன் ஆர்வத்தை வெளிக்காட்டினார்.

பேய் மாதிரி
மெட் காலாவில் சிறந்த ஃபேஷன் உடை அணிந்து வருபவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் குவியும். அதனை அடைய வேண்டும் என நினைத்த பிரியங்கா சோப்ரா பேய் மாதிரி மேக்கப் போட்டுக் கொண்டு கடந்த ஆண்டு மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அய்யோ பேய் என அவரது போட்டோவை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் மீம்களை போட்டு பங்கமாக ட்ரோல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே
கொரோனா பரவல் காரணமாக மெட் காலா நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், வீட்டிலேயே தனது உறவுக்கார குட்டிப் பெண் ஸ்கை கிருஷ்ணா, மேக்கப் போட்டு அலங்கரித்து, நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மணி மகுடத்தையும் சூட்டியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் பிரியங்கா சோப்ரா.

என்ன தீம்
ஆண்டுதோறும் உலகளவில் பல முன்னணி ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் அழகிகள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெறுவது வழக்கம். மேலும், ஒரு முக்கியமான தீமை ஆண்டுதோறும் கொண்டிருக்கும். பிரியங்கா சோப்ரா வீட்டிலேயே மெட் காலாவை கொண்டாடியுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தீம் ‘Pretty Pretty Princess' எனவும் குறிப்ப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











