அடேங்கப்பா, ப்ரியங்கா திருமணம் நடக்கும் அரண்மனையின் ஒரு நாள் வாடகையே ரூ. 43 லட்சமாமே
Recommended Video

மும்பை: நடிகை ப்ரியங்கா சோப்ராவின் திருமணம் நடக்கும் அரண்மனையின் ஒரு நாள் வாடகை ரூ. 43 லட்சம் என்று தெரிய வந்துள்ளது.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் வரும் டிசம்பர் 1ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் அந்த அரண்மனையின் வாடகை விபரம் வெளியாகியுள்ளது.

வாடகை
உமைத் பவன் அரண்மனையின் ஒரு நாள் வாடகை ரூ. 43 லட்சம். ப்ரியங்கா சோப்ராவின் திருமண நிகழ்ச்சி அங்கு நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. அப்படி என்றால் வாடகை மட்டும் ரூ. 1 கோடியே 72 லட்சம். அடேங்கப்பா, திருமணத்திற்காக ப்ரியங்கா பணத்தை இப்படி தண்ணீராக செலவு செய்கிறாரே என்று கூறி வியக்காதவர்களே இல்லை.

ப்ரியங்கா
திருமண ஏற்பாடுகளை கண்காணிக்க ப்ரியங்காவின் அம்மா மது சோப்ரா கடந்த வெள்ளிக்கிழமை ஜோத்பூர் வந்தார். ப்ரியங்கா எதற்காக ஜோத்பூரை தேர்வு செய்தார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனக்கு மிகவும் பிடித்த நகரம் இது. அதனால் தான் இந்த ஊரை தேர்வு செய்துள்ளோம் என்றார்.

நிச்சயதார்த்தம்
கடந்த ஆண்டு விருது விழா ஒன்றில் சந்தித்த ப்ரியங்கா, நிக் ஜோனஸ் காதலில் விழுந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தத்திற்கு நிக் ப்ரியங்காவுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள மோதிரத்தை அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களா
திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் அதிகம் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ப்ரியங்கா, நிக் வசிக்கப் போகிறார்களாம். இதற்காக அவர்கள் அங்கு ஒரு பங்களாவை வாங்கியுள்ளார்களாம். ப்ரியங்காவுக்கு ஏற்கனவே நியூயார்க் நகரில் சொந்தமாக வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











