அழுது அழுது நடித்தேன், மேரி கோம் ஓடவில்லை என்றால் என் இதயமே வெடித்துவிடும்: பிரியங்கா

By Siva

மும்பை: மேரி கோம் படம் மட்டும் ஓடவில்லை என்றால் என் இதயமே நொறுங்கிவிடும் என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான குத்துச் சண்டை பிரிவில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மேரி கோமின் வாழ்க்கை அவரது பெயரிலேயே இந்தியில் படமாகியுள்ளது. இந்த படத்தில் மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

அவர் படம் குறித்து கூறுகையில்,

அப்பா மரணம்

அப்பா மரணம்

என் அப்பா இறந்த நான்காவாது நாள் மேரி கோம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் ஒவ்வொரு நாளும் எனக்கு சவால் தான்.

அழுகை

அழுகை

படத்தில் எனது உயிரின் ஒரு பகுதியை செலுத்தியுள்ளேன். நான் தினமும் வீட்டுக்கு சென்று என் அம்மாவிடம் என்னால் இந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியும் என்று தோன்றவில்லை என கூறி அழுவேன். ஆனால் மறுநாள் படப்பிடிப்பு தளத்தில் இருப்பேன்.

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எனக்கு தோல்வியை கையாளத் தெரியாது. இந்த படம் நன்றாக ஓட வேண்டும். இல்லை என்றால் என் இதயமே நொறுங்கிவிடும்.

விளம்பரம்

விளம்பரம்

இது ஒன்றும் மசாலா படம் இல்லை. அதனால் படத்திற்கு அதிக அளவில் விளம்பரம் தேவைப்படுகிறது. இந்த படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

மேரி

மேரி

ஒரு வட இந்திய பெண்ணான நான் மேரியாக நடிக்க அவர் ஒப்புக் கொண்டார். ஒரு தெற்காசிய நடிகை நானாக நடிப்பதை விட ஒரு இந்தியரான நீங்கள் நடிப்பதையே நான் விரும்புகிறேன் என்று மேரி என்னிடம் தெரிவித்தார் என்றார் பிரியங்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X