நாங்க ஹேப்பி தம்பதி தாங்கோ... உல்லாச கப்பலில் நியூ இயர் பார்ட்டி கொண்டாடிய பாலிவுட் நாயகி

மும்பை : பாலிவுட்டின் சிறப்பான நடிகையாக உள்ளவர் பிரியங்கா சோப்ரா.

பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தொடர்களில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கணவருடன் பிளவு ஏற்பட்டதாக கூறப்படும் வதந்திகளுக்கு இவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா

தமிழில் நடிகர் விஜய்யின் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து பாலிவுட்டிற்கு சென்ற இவர், முன்னணி நாயகியாக மாறினார். கடந்த 2018ல் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை மணந்து அமெரிக்காவில் குடியேறினார்.

கணவருடன் கருத்து வேறுபாடு?

கணவருடன் கருத்து வேறுபாடு?

தொடர்ந்து பாலிவுட்டிலும் ஹாலிவுட்டில் சில தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதை இருவரும் மறுத்த நிலையில், தனது கணவர் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

விவாகரத்து வதந்திகள்

விவாகரத்து வதந்திகள்

இந்நிலையில் மீண்டும் விவாகரத்து குறித்த செய்திகள் சமீபத்தில் வெளியாகின. தனது கணவர் நிக் ஜோன்ஸ் பெயரை அவர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியது இதற்கு காரணமாக கூறப்பட்டது. நிக் ஜோன்சை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் பிரியங்காவிற்கு உள்ளதாக தெரிகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசமும் விவாகரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது புத்தாண்டையொட்டி கப்பலில் இருவரும் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விவாகரத்து தகவல்களுக்கு மீண்டும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 29th December 2021 - Promo 3 | Priyanka நீங்க Game-கு உண்மையா இல்லை Niroop குற்றச்சாட்டு
முத்தங்கள் பரிமாற்றம்

முத்தங்கள் பரிமாற்றம்

தன்னுடைய நண்பர்களுடன் இந்த பார்ட்டி கொண்டாட்டத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். மேலும் இருவரும் முத்தங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர். விதவிதமான உடைகள் மற்றும் ஸ்விம் சூட்களிலும் இவர்களை இந்த கொண்டாட்டத்தில் காண முடிகிறது. ஆனால் எந்த இடத்தில் இந்தக் கொண்டாட்டம் என்பதை பிரியங்கா வெளிப்படுத்தவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X