தி ஸ்கை இஸ் பிங்க் புரமோஷன் - ஸ்பைசி சிக்கனை வெளுத்து கட்டிய பிரியங்கா சோப்ரா
Recommended Video
மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா தி ஸ்கை இஸ் பிங்க் படத்தை ஹாலிவுட்டில் புரமோஷன் செய்வதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அங்குள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதில் மிக மிகக் காரமான வறுத்த கோழியை சாப்பிட வேண்டும். அதில் பங்கேற்று வறுத்த கோழியை சாப்பிடும்போது காரம் தாங்க முடியாமல் நிகழ்ச்சியில் இருந்த போதே கண்கலங்கி விட்டார்
பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த தமிழன் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் அந்த படத்திற்கு பிறகு பல மொழிகளில் நடித்தார் .முக்கியமாக இந்தியில் இவருக்கு நல்ல மார்கெட் கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி பல வெற்றி படங்களில் நடித்தார் பிரியங்கா சோப்ரா. அதற்கு பிறகு பல ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப் புகழும் பெற்றார். கடைசியாக இந்தியில் அவர் நடித்த பாஜிராவ் மஸ்தானி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கு பின் அமெரிக்க பாப் இசை பாடகர் நிக் ஜோனஸ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகியும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்திய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது ஸ்கை இஸ் பிங்க் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் பர்ஹான் அக்தார், ஸாய்ரா வசீம், ரோஹித் சுரேஷ் சராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரொனி ஸ்க்றேவாலா, சித்தார்த் ரோய் கபூர், கிலியன் கேர்வின், மது சோப்ரா ஆகியோருடன் பிரியங்கா சோப்ராவும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குபவர் பெண் இயக்குனரான சோனோலி போஸ். இவர் இதற்கு முன் அமு, மர்கரிட்டா வித் எ ஸ்ட்ரா, சிட்டகாங் படங்களை இயக்கியவர்.
தற்போது தி ஸ்கை இஸ் பிங்க் படத்திற்காக புரோமசன் செய்து வரும் பிரியங்கா சோப்ரா .ஹாலிவுட்டில் இப்படத்தை புரமோஷன் செய்வதற்காக, அங்குள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதில் மிக மிகக் காரமான வறுத்த கோழியை சாப்பிட வேண்டும். அதில் பங்கேற்று வறுத்த கோழியை சாப்பிடும்போது காரம் தாங்க முடியாமல் நிகழ்ச்சியில் இருந்த போதே கண்கலங்கி விட்டார் பிரியங்கா. அவர் துணிச்சல் மிக்க நடிகை என்பதனை நிரூபித்து விட்டார்.


Click it and Unblock the Notifications











