twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடப் பாவமே... சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ராவின் "அக்குள்"

    |

    மும்பை: விசித்திரமான வழக்கு இது என்று மனோகரா படத்தில் சிவாஜி கணேசன் வசனம் பேசுவார். கிட்டத்தட்ட பிரியங்கா சோப்ராவுக்கும் இது ஒரு வினோதமான, விசித்திரமான பிரச்சினைதான். பிரச்சினைக்கு அவர் பொறுப்பல்ல.. மாறாக அவரது "அக்குளை" வைத்து சிலர் பஞ்சாயத்தைக் கூட்டி விட்டனர்

    இப்படியெல்லாமா பிரச்சினையைக் கிளப்புவார்கள் என்று காண்டாகிப் போன பிரியங்கா நல்லா பாத்துக்கங்கப்பா. இது ஒரிஜினல்தான் என்று கூறி புதுப் படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் போட்டு சூட்டைக் கூட்டியுள்ளார்.

    எல்லாம் இந்த மேக்ஸிம் இதழால் வந்த வினைதான். மேக்ஸிம் இதழின் ஜூன் - ஜூலை பதிப்பின் அட்டைப் படத்தில் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றுள்ளார். கவர்ச்சிகரமான இந்தப் படத்தில் அவர் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

    ஒரிஜினல் 'அக்குள்' அல்ல

    ஒரிஜினல் 'அக்குள்' அல்ல

    அந்தப் புகைப்படத்தைப் பார்த் பலர் அவரது அக்குள் பகுதி மிகவும் சாப்ட்டாக உள்ளது. கோடு கூட தெரியவில்லை. யாருக்குமே இப்படி இருக்க வாய்ப்பில்லை. இது போட்டோஷாப் செய்யப்பட்டது என்று எழுத ஆரம்பித்து விட்டனர்.

    ஹாட்டஸ்ட் பெண்

    மேக்ஸிம் இந்தக் கவர் படத்தைப் போட்டு அதில் பிரியங்கா சோப்ரா ஹாட்டஸ்ட் உமன் இன் தி வேர்ல்ட் என்றும் போட்டுள்ளது. ஆனால் இது போட்டோஷாப் பண்ணப்பட்ட படம் என்று கூறி பலர் கலாய்க்க ஆரம்பித்ததால் சர்ச்சையானது.

    அக்குள் ஒப்பீடு

    அக்குள் ஒப்பீடு

    பலர் பிரியங்கா சோப்ராவின் பல்வேறு பழைய படங்களைப் போட்டு அதில் தெரிகிறது பாருங்கள், இதில் தெரிகிறது பாருங்கள். இதில் மட்டும் இல்லை பாருங்கள் என்று கம்பேரிசன் அளவுக்கு விவாதத்தை வேகமாக்கி விட்டனர்.

    நல்லா பாருங்கப்பா ஒரிஜினல்தான்

    நல்லா பாருங்கப்பா ஒரிஜினல்தான்

    இந்த சர்ச்சை குறித்து பிரியங்கா சோப்ரா கூட ஆச்சரியம் தெரிவித்திருந்தார். இதைக் கூடவா விவாதிப்பார்கள் என்றும் கேட்டிருந்தார். இந்த நிலையி்ல அவரே ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.

    ப்ளீஸ் ஸ்டாப்

    ப்ளீஸ் ஸ்டாப்

    (ஆர்ம்) "பிட் ஸ்டாப்பிங்" என்று எழுதியுள்ள அவர், இரு கைகளையும் தூக்கியபடி போஸ் கொடுத்து அந்தப் படத்தைப் போட்டுள்ளார். இது ஒரிஜினல் என்றும் அவர் கூறியுள்ளார். பில்டர் யூஸ் பண்ணவில்லை என்றும் கூறியுள்ள அவர் ஆரம்பிட் டயரி என்றும் நக்கலடித்துள்ளார்.

    பாரிஸ் பால்கனியில் வைத்து

    பாரிஸ் பால்கனியில் வைத்து

    இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பாரிஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பால்கனியிலிருந்து எடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இது இன்னொரு ஆர்ம்பிட் என்றும் கிண்டலாக கூறியுள்ளார் பிரியங்கா.

    நாட்டுலதான் எவ்வளவு பிரச்சினை...!

    English summary
    Actress Priyanka Chopra has indirectly slammed trolls on social media by posting a photograph of her “real armpits” on Instagram. Here is another ‘pit-stopping’ picture to add to the debate. Will The Real Armpit Please Stand Up. No filter. Armpit diaries,” the 33-year-old actress captioned the image that she posted on Tuesday night.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X