Summer Special: ப்பா.. மோனோகினியில் ஃபயரா இருக்காரே பிரியங்கா சோப்ரா.. வாரணாசி ஹீரோயினின் தாராள போஸ்!
ஹைதராபாத்: விஜய் நடித்த தமிழன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது மகேஷ் பாபுவின் பிரம்மாண்டமான படமான வாரணாசி படத்தில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை நீச்சல் குளத்தில் மோனோகினி உடையில் வேறலெவலில் மஜா பண்ணிக் கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பிரியங்கா சோப்ராவுக்கு தமிழ்நாட்டில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தியில் நடிக்க ஆரம்பித்த நிலையில், ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அதிக ரசிகர்களை கவர்ந்த பாலிவுட் குயினாக மாறினார்.

ஆனால், திடீரென அவருக்கு அங்கேயும் சில பிரச்னைகள் கிளம்ப ஹாலிவுட் நடிகையாக தன்னை அப்கிரேட் செய்தார். ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு படம் உலகளவிலான ரசிகர்களை ஃபோகஸ் செய்வதால் பிரியங்கா சோப்ரா அந்த படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சன் டே சம்மர் ஸ்பெஷல்: இன்ஸ்டாகிராமில் 92.8 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள பிரியங்கா சோப்ரா சீக்கிரமே செஞ்சுரி போட்டுவிடுவார் என்றே தெரிகிறது. வாரணாசி படத்துக்காக ஹைதராபாத்தில் புதிதாக வீடு வாங்கி குடிகொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிகினி உடையில் மஜா பண்ண போட்டோக்களை வெளியிட்டு தனது கோடிக் கணக்கான ரசிகர்களை குளிர வைத்துள்ளார்.

மோனோகினியில் மந்தாகினி: வாரணாசி படத்தின் போஸ்டரில் மஞ்சள் நிற சேலை அணிந்துக் கொண்டு கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு ஆக்ஷன் ஹீரோயினாக பறந்து பறந்து சுடும் பிரியங்கா சோப்ரா நேற்று சன் டே விடுமுறையை தனது வீட்டில் மோனோகினி அணிந்துக் கொண்டு நீச்சல் குளமே கதியென கிடந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
அய்யோ பேய்: மேலும், முகத்தில் கருப்பு நிற ஃபேஸ் மாஸ்க் அணிந்துக் கொண்டு அவர் படுத்திருக்கும் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்து ரசிகர்களை கதிகலங்க வைத்துவிட்டார். சில நெட்டிசன்கள் அய்யோ பேய் என்றே ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளனர். வாரணாசி திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர். ராஜமெளலியின் முந்தைய படங்களின் சாதனைகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய படங்களின் சாதனைகளையும் அது முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications