அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா: வயித்தெரிச்சல் நடிகைகளை பார்த்து சிரிக்கும் நடிகை
மும்பை: பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்ற பொறாமையில் அவரை பற்றி சில பாலிவுட் நடிகைகள் வதந்தி பரப்புவதையும் அவர் கண்டுகொள்ளவில்லை.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குவான்டிகோ ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஒரு ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் இந்திய நடிகை ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை.

இதற்கே பாலிவுட்டில் பல நடிகைகளுக்கு காதில் புகை வந்தது. இந்நிலையில் பிரியங்கா பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக வேறு நடித்துள்ளார்.
இதை பார்த்த சில பாலிவுட் நடிகைகள் பொறாமையில் பிரியங்கா பற்றி தப்புத் தப்பாக வதந்தி பரப்பி வருகிறார்களாம். இதை எல்லாம் கேட்டு பிரியங்கா கோபம் அடையவில்லை. மாறாக அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூலாக கூறுகிறாராம்.
கஷ்டப்பட்டு வதந்தி பரப்பி இப்படி புஸ்ஸாகிவிட்டதே என நடிகைகள் கவலை அடைந்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











