திருமணமான 117 நாட்களில் விவாகரத்தா?: பத்திரிகை மீது வழக்கு தொடரும் ப்ரியங்கா சோப்ரா
லாஸ் ஏஞ்சல்ஸ்: திருமணமான 117 நாட்களில் தானும், நிக் ஜோனஸும் விவாகரத்து பெறப் போவதாக செய்தி வெளியிட்ட அமெரிக்க பத்திரிகை மீது வழக்கு தொடரப் போகிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
ஓகே எனும் அமெரிக்க வார பத்திரிகை பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனஸும் திருமணமான 117 நாட்களில் விவாகரத்து பெறப் போவதாக செய்தி வெளியிட்டது.
நிக்கும், ப்ரியங்காவும் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவதாக அது தெரிவித்தது.

வழக்கு
தன் திருமண வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கும்போது தவறான தகவல் வெளியிட்டதற்காக அந்த பத்திரிகை மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

நிக்
ப்ரியங்கா ஒரு தடவை முடிவு செய்துவிட்டார் என்றால் அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த பத்திரிகை மீது அவர் வழக்கு தொடர்வது உறுதி. நான் ப்ரியங்கா மற்றும் நிக் ஜோனஸை கடந்த வாரம் சந்தித்தேன். அவர்கள் அவ்வளவு சந்தோஷமாக உள்ளனர் என்று ப்ரியங்காவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

மனைவி
ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் இடையே நல்ல புரிதல் உள்ளது. அவர்களுக்கு இடையே பிரச்சனை வர வாய்ப்பே இல்லை. இந்த பத்திரிகை செய்தி வெளியிட வேண்டுமே என்று ப்ரியங்கா, நிக் பிரியப் போவதாக தெரிவித்துள்ளது என்று அந்த நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்
அமெரிக்க பத்திரிகை ப்ரியங்காவை பற்றி மோசமாக செய்தி வெளியிடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக தி கட் பத்திரிகை ப்ரியங்காவை ஏமாற்று பேர்வழி என்று செய்தி வெளியிட்டது. ஹாலிவுட்டில் கவனம் செலுத்த வசதியாக அவர் அமெரிக்கரான நிக்கை திருமணம் செய்ததாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











