ரூ. 13 கோடி கொடுத்தும் சல்மான் கான் படத்தில் இருந்து விலகிய ப்ரியங்கா: காரணம்...

By Siva

Recommended Video

ரூ. 13 கோடி கொடுத்தும் சல்மான் கான் படத்தில் இருந்து விலகிய ப்ரியங்கா- வீடியோ

மும்பை: ரூ. 13 கோடி சம்பளம் கொடுத்தும் பாரத் படத்தில் இருந்து விலகியுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா சல்மான் கானின் பாரத் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 13 கோடி சம்பளம் பேசப்பட்டது.

இந்நிலையில் ப்ரியங்கா பாரத் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

ப்ரியங்கா

ப்ரியங்கா

ப்ரியங்கா சோப்ரா அண்மையில் இந்தியா வந்தபோது பாரத் படப்பிடிப்பில் இரண்டு நாட்கள் கலந்து கொண்டார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டது படக்குழுவை தவிர வேறு யாருக்கும் தெரியாதாம். அந்த அளவுக்கு ரகசியமாக படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படம் துவங்கியதில் இருந்து இறுதி வரை வரும் கதாபாத்திரம் என்பதால் தான் பாரத் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ப்ரியங்கா.

காதல்

காதல்

சல்மான் கானின் காதல் மனைவியாக நடிக்க ப்ரியங்கா ஒப்புக் கொண்ட பிறகு திஷா பதானி, தபு, நோரா ஃபதேஹி, சுனில் குரோவர், ஆசிப் ஷேக் என்று ஒரு பட்டாளத்தையே படத்தில் சேர்த்துள்ளனர். இதை பார்த்த ப்ரியங்கா சோப்ரா கடுப்பாகிவிட்டார். நட்சத்திர பட்டாளமே இருக்கும் படம் பாரத். இது சல்மான் படம் அல்ல. இதில் நடித்தால் தனது இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்று நினைத்துள்ளார் ப்ரியங்கா. இதையடுத்து அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

திருமணம்

திருமணம்

ப்ரியங்கா சோப்ரா சல்மான் கான் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நெருக்கமாக இருப்பதால் படத்தில் இருந்து விலக யோசித்துள்ளார். அவர் படத்தில் இருந்து விலகியது குறித்து அறிந்த சல்மான் கான் கோபப்பட்டுள்ளார். ஆனால் ப்ரியங்காவுக்கும், அவரின் காதலர் நிக் ஜோனஸுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக அமெரிக்காவில் பேச்சாக கிடக்கிறது. நிச்சயதார்த்தத்தால் தான் படத்தில் இருந்து விலகினார் என்பது அறிந்து சல்மான் சமாதானம் ஆகிவிட்டாராம்.

நிம்மதி

நிம்மதி

சல்மானிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று நினைத்தபோது நிச்சயதார்த்தம் நடந்த விஷயம் ப்ரியங்காவுக்கு கை கொடுத்துள்ளது. ப்ரியங்காவும், நிக் ஜோனஸும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரத் படத்தில் ப்ரியங்காவுக்கு பதில் நடிக்குமாறு கத்ரீனா கைஃபிடம் பேசியுள்ளார்களாம். லண்டனில் இருக்கும் கத்ரீனா நாடு திரும்பியதும் சம்மதம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X