ஆத்தி.. பிரியங்கா கழுத்துல வைர பாம்பு!.. நெக்லஸ் விலை மட்டும் இத்தனை கோடியா?.. தலையே சுத்துதே!

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் நேற்று நடைபெற்ற தனியார் பிராண்ட் நிகழ்ச்சிக்கு கழுத்தில் பாம்பு டிசைன் கொண்ட வைர நெக்லஸ் அணிந்து வந்தது அனைவரது கண்களையும் கொத்தி எடுத்துள்ளது.

பாலிவுட் நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா சமீப காலமாக பாலிவுட் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி ஹாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். டுவைன் ஜான்சன் நடித்த பே வாட்ச் படத்தில் வில்லியாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா மேட்ரிக்ஸ் 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Priyanka Chopra wears 8 crore rupees worth diamond necklace and stuns with serpentine necklace too

தன்னை விட இளைய வயதுடைய நிக் ஜோனஸ் எனும் இசைக் கலைஞரை திருமணம் செய்துக் கொண்ட பிரியங்கா சோப்ராவுக்கு மால்டி எனும் ஒரு மகள் உள்ளார்.

8 கோடி ரூபாய் நெக்லஸ்: பிரியங்கா சோப்ரா மும்பையில் நடைபெற்ற இஷா அம்பானி பார்ட்டிக்கு பிங்க் நிற சேலையை அணிந்து கொண்டு சென்றார். அவர் கழுத்தை ஒட்டி அணிந்த வைர நெக்லஸ் வைரங்கள் மற்றும் பச்சை நிற விலை மதிக்க முடியாத கற்களால் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் விலை 1 மில்லியன் டாலர் என்கின்றனர். இந்திய மதிப்பின் படி பார்த்தால் 8 கோடி ரூபாய்க்கு பிரியங்கா சோப்ரா கழுத்தில் வைர நெக்லஸ் அணிந்து வந்தது ஒட்டுமொத்த உலகத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வைர பாம்பு: சிவன் கழுத்தை சுற்றி பாம்பு இருப்பது போல அது என்னடா பிரியங்கா கழுத்தை சுற்றி வைர பாம்பு இருக்கிறதே என அவர் தனியார் பிராண்ட் நிகழ்ச்சி ஒன்றுக்கு மெல்லிசாக அணிந்து வந்த வைர நெக்லஸையும் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர். அந்த மெல்லிசான பாம்பு வைர நெக்லஸ் விலை மட்டும் 59 லட்சம் ரூபாய் என்கின்றனர். ஜெய்ப்பூரில் இருந்து டிசைன் செய்யப்பட்ட நகைகளை நேற்று நடைபெற்ற அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு பிரியங்கா சோப்ரா அணிந்து சென்றது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை மட்டுமின்றி பிரபல நடிகைகளின் கவனத்தையும் கவர்ந்திருப்பது தான் ஹாட் டாப்பிக்காக பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்த படங்கள்: தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக வெளியான சிட்டாடல் வெப்சீரிஸ் அவருக்கு மிகப்பெரிய அளவுக்கு வெற்றியை பெற்றுத் தந்த நிலையில், அடுத்ததாக The Bluff எனும் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X