பிரியங்கா சோப்ராவின் மேரிகோம் பர்ஸ்ட் லுக்… மிரண்ட பாலிவுட்

By Mayura Akilan

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேரிகோம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து பாலிவுட்டே மிரண்டு போயிருக்கிறது.

அழகு பதுமையாக இதுவரை நடித்து வந்த பிரியங்கா சோப்ரா. மேரிகோம் படத்தில் நடிப்பு ராட்சஷியாக உருவெடுத்திருக்கிறார் என்று பாலிவுட் பட உலகினர் பேசிக்கொள்கின்றனர்.

மேரிகோம் வாழ்க்கை

மேரிகோம் வாழ்க்கை

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மேரி கோமின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகிறது. ஓமங் குமார் இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா மேரிகோமாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததும் கேலியும் கிண்டலும் செய்தது பாலிவுட்.

சிக்ஸ் பேக் உடம்பு

சிக்ஸ் பேக் உடம்பு

மேரிகோமின் தோற்றத்துக்கும், பிரியங்காவின் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை. மேரிகோம் உடல் இரும்பு மாதிரி உருண்டு திரண்டு சிக்ஸ் பேக்குடன் இருக்கும். பிரியங்காவின் உடம்பு மென்மையானது என்ற விமர்சனங்கள் வந்தது.

அசத்திய பிரியங்கா சோப்ரா

அசத்திய பிரியங்கா சோப்ரா

அத்தனையும் உடைத்து எரிந்து விட்டார் பிரியங்கா. மூன்று மாதங்கள் மேரிகோமோடு தங்கி குத்துச் சண்டையின் அடிப்படை விதிகளையும், அவரது மேனரிசங்களையும் கற்றுக் கொண்டார்.

மெருகேறிய உடம்பு

மெருகேறிய உடம்பு

கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடம்பில் சிக்ஸ் பேக் கொண்டு வந்துள்ளார் பிரியங்கா. இப்போது நடித்தும் முடித்து விட்டார். மேரி கோம் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பட உலகினர் வாழ்த்து

பாலிவுட் பட உலகினர் வாழ்த்து

மேரிகோம் படத்தின் போஸ்டரைப் பார்த்து இயக்குநரும் நடனஇயக்குநருமான ஃபாராகான், நடிகை ஷ்ரேயா, அலியாபட் உள்ளிட்டோர் பிரியாங்காவிற்கு வாழ்த்து கூறியுள்ளனர். முன்பு கேலி செய்த பலரும் இப்போது தங்களின் கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளதோடு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தேசிய விருதுக்கு குறி

தேசிய விருதுக்கு குறி

கான் நடிகர்களுடன் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த பிரியங்காவுக்கு தேசிய விருது எட்டாக்கனியாகவே இருந்தது. மேரிகோம் மூலம் அதனை எட்டிவிடுவார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X