விஜய் என் மகளிடம் பொறுமையாக இருந்தார்.. உண்மையில் கஷ்டம்.. நடிகையின் தாய் ஓபன் டாக்

சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானார். அதனையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்தார். அந்த சமயத்தில் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவைவிட ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மால்டி என்ற மகள் இருக்கிறார். இந்தச் சூழலில் பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா விஜய் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. மாடலிங்கில் நுழைந்த அவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளர் ஆனார். அதிலிருந்து பிரியங்கா சோப்ராவின் மீது பலரது கவனம் விழுந்தது. மேலும் சினிமாவில் நுழைந்து பெரும் ரவுண்டு வருவார் என்றும் கணிக்கப்பட்டது.

Vijay Priyanka Chopra

தமிழன் படத்தில் பிரியங்கா சோப்ரா: அதன்படி முதன்முதலாக விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தை கூடுதல் ஸ்டார் வேல்யூவுடன் கொடுக்க நினைத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் மணிரத்னத்தின் சகோதரருமான ஜிவி, மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்று சென்சேஷனலாக இருர்ந்த பிரியங்காவை ஹீரோயினாக தேர்வு செய்தார். படம் சுமாரான ஹிட் என்றாலும் உலக அழகி நடித்திருக்கிறார் என்ற பெரும் விளம்பரம் அந்தப் படத்துக்கு பிரியங்கா சோப்ரா மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Priyanka Chopra

பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா: கோலிவுட்டில்தான் தனது கரியரை ஆரம்பித்தாலும் அதன் பிறகு ஏதோ காரணங்களால் தமிழில் அவர் நடிக்கவே இல்லை. அவர் 2003ஆம் ஆண்டு தி ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் தி ஸ்பை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக முன்னணி நடிகையாக மாறினார் ப்ரியங்கா.

ஹாலிவுட் என்ட்ரி கொடுத்த பிரியங்கா: பாலிவுட்டில் கலக்கிய ப்ரியங்கா சோப்ரா குவாண்ட்டிகோ என்ற தொடர் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதித்தார். அங்கும் தனது திறமையை அவர் நிரூபித்ததால் ஹாலிவுட்டில் செட்டில் ஆனார். மேலும் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அவர் இப்போது ராஜமௌலியும், மகேஷ் பாபும் இணையும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார்.

மது சோப்ரா பேட்டி: இந்நிலையில் தமிழன் படத்தில் தனது மகள் எவ்வாறு கமிட்டானார்; தனது மகளிடம் விஜய் எப்படி நடந்துகொண்டார் என்பது குறித்து பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா ஓபனாக பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், " தமிழன் படத்தில் நடிப்பதற்கு முதலில் பிரியங்கா சோப்ரா ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு ஒருவழியாக ஒத்துக்கொண்டு கோடை விடுமுறையில் இரண்டு மாதங்கள் ஷூட் செய்துகொள்ளட்டும் என்று கூறினார். பிரியங்கா அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது தந்தை விருப்பப்பட்டார். அவருக்காக அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்.

Vijay Priyanka Chopra

விஜய் பொறுமையாக இருந்தார்: அதேபோல் விஜய் மீது பிரியங்காவுக்கு ரொம்பவே மரியாதை இருக்கிறது. அதாவது பிரபுதேவாவின் சகோதரர் ராஜு சுந்தரம்தான் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்தார். ஸ்டெப்புகள் எல்லாம் பயங்கர கஷ்டமாக இருந்தன. அதை கற்றுக்கொள்வது பிரியங்காவுக்கு கடினமாக இருந்தது. ஆனால் விஜய் ரொம்பவே பொறுமையாக இருந்தார். அதேபோல் புதிய மொழியை கற்றுக்கொள்வதும் பிரியங்காவுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X