பாலிவுட்டின் புது ஹீரோவான பிரியங்கா 'மேரி கோம்' சோப்ரா
மும்பை: மேரி கோம் படம் மூலம் ஹீரோவுக்காக தான் படம் ஓட வேண்டும் என்பது இல்லை என நடிகை பிரியங்கா சோப்ரா நிரூபித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே இந்தியில் படமானது. படத்தில் மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.
கடந்த 5ம் தேதி படம் ரிலீஸானது. சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

அப்பா மரணம்
பிரியங்காவின் அப்பா இறந்த 4வது நாள் மேரி கோம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஒவ்வொரு நாளும் அழுது அழுது நடித்ததாக பிரியங்கா தெரிவித்திருந்தார்.

வாழ்த்து
மேரி கோம் படத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பிரியங்காவின் நடிப்பை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

நன்றி
படத்திற்கு அமோக ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு என் நன்றி என்று பிரியங்கா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேரி கோம் படத்தின் மூலம் ஹீரோவின் அர்தத்தை பிரியங்கா மாற்றியுள்ளார் என்று பேசப்படுகிறது.

இதயம்
தான் கஷ்டப்பட்டு நடித்த மேரி கோம் படம் ஓடாவிட்டால் தனது இதயமே நொறுங்கிவிடும் என்று பிரியங்கா தெரிவித்திருந்தார். தற்போது படம் நல்ல வசூலை அள்ளி வருவதை பார்த்து அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.

ஃபேஷன்
மாதுர் பந்தர்கர் இயக்கத்தில் பிரியங்கா ஃபேஷன் படத்தில் நடித்தார். படத்தை தனது நடிப்பால் தாங்கிய அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து மேரி கோம் படத்தையும் பிரியங்கா தனது தோள்களில் தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











