குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து.. பிரியங்கா மோகன் நெகிழ்ச்சியாக பதிவு!
சென்னை: தென் கொரிய நாட்டின் ஜனாதிபதி லீ ஜே மியங் தற்போது இந்தியா வந்திருக்கும் நிலையில் அவருக்கு குடியரசு தலைவர் விருந்து வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகை பிரியங்கா மோகன் அழைப்பு வந்த நிலையில், அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் நடிப்பில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 'மேட் இன் கொரியா' மார்ச் 12 ந் தேதி வெளியானது. தமிழ்நாட்டில் இருந்து தென் கொரியா வரை செல்லும் செண்பாவின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த கதை நடிகர்களின் திறமையான நடிப்பு, அதன் அழகான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம்,
மனதை கவரும் இருந்ததால் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சிறப்பு விருந்து: இந்நிலையில், தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியங் இந்தியா வந்து இருக்கும் நிலையில், அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் விருந்து வழங்கப்பட்டது. இந்த விழாவில் 'மேட் இன் கொரியா' படத்தில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு இரவு விருந்தில் கலந்துகொண்டதை, தனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியங் ஆகியோரின் முன்னிலையில் இந்த விருந்து நடைபெற்றது என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பலரும் பிரியங்கா மோகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரியங்கா மோகன்: சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா மோகன். இவர் நடித்த முதல் படமே ரூ 100 கோடி வசூலில் ஜெயித்ததால் விரைவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டாக்டர் படத்திற்கு பின், எதற்கும் துணிந்தவன். டான், கேப்டன் மில்லர் போன்ற படத்தில் நடித்தார். ஆனால், அனைத்து படங்களும் இவருக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது பிரியங்கா மோகன் அரசன் படத்தில் கமிட்டாகி நடித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications