Priyanka Mohan - பிரியங்கா மோகன் கிளாமர் காட்சிகளில் நடிப்பாரா?.. இதோ அவரே சொன்ன பதில்
சென்னை: நடிகை பிரியங்கா மோகன் தற்போது வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட ஆரம்பித்திருக்கும் அவர் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படமானது பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அடிப்படையில் பொறியாளரான இவர் அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்ததால் திரைத்துறை கதவு திறந்தது. முதல் படத்தை விக்ரம் குமார் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் பிரியங்கா மோகனின் நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.
பிஸி பிரியங்கா: டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். இப்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிளாமர்: இந்த சூழலில் பிரியங்கா மோகனிடம் நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஓரளவுக்கு மேல் தோலை காண்பித்து நடிக்க எனக்கு விருப்பமில்லை. கவர்ச்சியில் ஒரு எல்லையை மீறக்கூடாது என்ற நோக்கத்தில்தான் நான் நடித்துவருகிறேன். என்னுடைய கதாபாத்திரங்களில் இருக்கும் கிளாமர் யாருடைய முகத்தையும் சுளிக்காத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்" என்றார்.
டிக் டாக்: இதற்கிடையே தமிழில் அவர் நடிப்பில் டாக்டர் படம் முதலில் வெளியானாலும் அதற்கு முன்னதாகவே டிக் டாக் என்ற படத்தில் கமிட்டாகி நடித்துவிட்டார் என கூறப்படுகிறது. அந்தப் படமானது சில தினங்களுக்கு முன்புதான் வெளியானது. அதன் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் இருந்தது. ஏனெனில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன்; டிக் டாக் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார்.
காட்சிகளை காணவில்லை: அந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. ஆனால் அதில் 20 நிமிடங்கள்வரை காட்சிகளை காணவில்லை என படக்குழுவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். அந்த 20 நிமிட காட்சிகளில்தான் பிரியங்கா மோகன் கிளாமராக நடித்த காட்சிகள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. மேலும் அந்தக் காட்சிகள் காணாமல் போனதற்கு பின்னணியில் பிரியங்கா மோகன்தான் இருக்கிறார் என்றும்; வளர்ந்துவரும் நேரத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்தது வெளியே வந்தால் தன்னை நோக்கி கிளாமர் கதாபாத்திரங்களே வரும் என்ற எண்ணத்தில்தான் அந்தக் காட்சிகள் தூக்கப்பட்டதற்கு பின்னணியில் அவர் இருந்தார் என்ற பேச்சு இணையத்தில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











