ஹோட்டலில் இருக்கும் பிரியங்கா மோகன்.. மேடம் செம ஜாலிதான் போல.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் பிரியங்காவின் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்தச் சூழலில் அவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அடிப்படையில் பொறியாளரான இவர் அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்ததால் திரைத்துறை கதவு திறந்தது. முதல் படத்தை விக்ரம் குமார் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் பிரியங்கா மோகனின் நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.
பிஸி பிரியங்கா: டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். கடைசியாக அவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிக் டாக்: இதற்கிடையே தமிழில் அவர் நடிப்பில் டாக்டர் படம் முதலில் வெளியானாலும் அதற்கு முன்னதாகவே டிக் டாக் என்ற படத்தில் கமிட்டாகி நடித்துவிட்டார் என கூறப்படுகிறது. அந்தப் படமானது சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் இருந்தது. ஏனெனில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன்; டிக் டாக் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். அது பெரும் பேசுபொருளானது. ஆனால் அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை.
ஃபோட்டோ ஷூட்: பிரியங்கா மோகன் இப்போதுவரை ஹோம்லி கதாபாத்திரங்களிலேயே நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். சமீபத்தில்கூட மாடர்ன் உடையில் மெத்தையில் படுத்தபடி அவர் எடுத்துக்கொண்ட ஃபோட்டோஷூட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
புதிய புகைப்படங்கள்: இந்நிலையில் பிரியங்கா மோகன் தன்னுடைய புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு ஹோட்டலுக்கு சென்று அவர் சாப்பிடும் புகைப்படங்களும், டீ ஷர்ட் ஜீன்ஸில் கேஷுவலாக போஸ் கொடுக்கும்படியும் இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகன் எதை செய்தாலும் க்யூட்டாக இருக்குதே; அழகும் அள்ளுதே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











