Priyanka Mohan: ஜெயம் ரவி ஜோடி.. எனக்கும் ஹார்ட் பிரேக் நடந்திருக்கு.. பிரியங்கா மோகன் ஓபன் டாக்!
சென்னை: நடிகை பிரியங்கா மோகன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 6 வருடங்களில் சுமார் 10 படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் இவர் அனைத்து படங்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு நடிப்பதில்லை. தனக்கு பிடித்திருந்தால் ஓகே சொல்லி நடிக்கிறார். ஒரு படத்தை முடித்து விட்டே அடுத்த படத்தில் பெரும்பாலும் கமிட் ஆகி வருகிறார்.
பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானியின் சூர்யாவின் சாட்டர்டே திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றி பெற்றது. சமீபத்தில், அந்த படம் ஓடிடியில் வெளியாகியும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்ததாக வரும் தீபாவளிக்கு ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்திலும் பிரியங்கா மோகன் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரியங்கா மோகன் தனக்கு ஏற்பட்ட ஹார்ட் பிரேக் குறித்தும் பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் முதல் ஜெயம் ரவி வரை: சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் துணிச்சலாக நடித்தார். மீண்டும் எஸ்கேவுடன் ஜோடி போட்டு டான் படத்தில் டக்கர் செய்தார். இந்த ஆண்டு பொங்கலுக்கு பிரியங்கா மோகன் தனுஷ் உடன் இணைந்து நடித்த கேப்டன் மில்லர் படம் வெளியானது. சமீபத்தில் வெளியான நானியின் சரிபோதா சனிவாரம் தெலுங்கு மற்றும் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கும் பிரியங்கா மோகன் நடித்துள்ள பிரதர் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகரை கண்டித்த பிரியங்கா மோகன்: நடிகை பிரியங்கா மோகன் மீது பல இளைஞர்கள் பித்துப் பிடித்து உள்ள நிலையில், சமீபத்தில், ரசிகர் ஒருவரை பிரியங்கா மோகன் கண்டித்த வீடியோக்கள் தீயாக பரவின. மேலும், காருக்குள்ளே வந்து உட்கார்ந்துக்குறியா என்றும் கடுப்பாகி பிரியங்கா மோகனன் பேசிய வீடியோக்களும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
கோல்டன் ஸ்பேரோ டான்ஸ்: தனுஷ் இயக்கத்தில் தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்து வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் பிரியங்கா மோகன் ஆட்டம் போட்ட கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். லிரிக் வீடியோவில் பார்த்தது கொஞ்சம் தான், பாடல் முழுவதுமே என்னுடைய ஆட்டம் தான் ஹைலைட் எனக் கூறியுள்ளார்.
சேஃப்பா ஃபீல் பண்ண வைங்க: டேட்டிங் குறித்துப் பேசிய பிரியங்கா மோகன் டேட்டிங் செல்லும் போது பெண்களை சேஃப்பா ஃபீல் பண்ண வைங்க. அப்போதான் ஒருவர் மீது நல்ல எண்ணம் பெண்களுக்கு வரும் என தனது கருத்தை டேட்டிங் குறித்து முன் வைத்தார். மேலும், தவறு செய்யாத ஆட்கள் யார். அனைவரும் தவறு செய்வது இயல்புதான். அதற்காக ரிகரெட் பண்ண வேண்டாம் என்றார்.
ஹார்ட் பிரேக் நடந்திருக்கு: இளைஞர்களின் ட்ரீம் கேர்ளாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகனுக்கும் ஹார்ட் பிரேக் நடந்திருக்கு என சொல்லி இளைஞர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டார் பிரியங்கா மோகன். ஜெயம் ரவியுடன் பிரதர் படத்தில் நடித்த அனுபவம் சூப்பராக இருந்தது என்றும் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











