பிரியங்கா மோகனை டார்கெட் செய்த விஜய் மேனேஜர்?.. ட்ரோல்கள் பற்றி அவங்க சொல்வது இதுதான்.. செம தெளிவு பாஸ்
சென்னை: பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் மேட் இன் கொரியா என்ற படம் 12ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. ரிலீஸுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரம் காட்டிவருகிறார். அந்தவகையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்; தன் மீது நடத்தப்பட்ட இணைய தாக்குதல்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தமிழில் டாக்டர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். முதல் படமே நூறு கோடி ரூபாய் வசூலித்து அசத்தியது. இவரது நடிப்பும், அழகும் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தது. இயக்குநர்களின் கவனத்தையும் ஈர்த்தார். எனவே கோடம்பாக்க இயக்குநர்கள் அடுத்தடுத்து பிரியங்காவை தங்களது படங்களில் கமிட் செய்தார்கள். அப்படி மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த டான் திரைப்படமும் நூறு கோடி ரூபாய் வசூலித்து அசத்தியது. அதேசமயம் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த எதற்கும் துணிந்தவன், தனுஷுக்கு ஜோடியாக நடித்த கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன.

அடுத்த படம்: அடுத்ததாக அவர் மேட் இன் கொரியா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இங்கிருந்து கொரியாவுக்கு செல்லும் பெண் அங்கே சென்று வாழ்க்கையையும், தன்னையும் புரிந்துகொள்வதுதான் படத்தின் ஒன் லைன். இதனை ரா.கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கிறார். மார்ச் 12ஆம் தேதி இப்படமானது நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இணைய தாக்குதல்: பிரியங்கா மோகனுக்கு சமீபமாக வெற்றி படம் எதுவும் அமையவில்லை. குறிப்பாக அவர் மீது சோஷியல் மீடியாவில் ட்ரோல்கள் அதிகரித்தன. அவருக்கு நடிக்க தெரியாது, நடனம் ஆட தெரியாது என்று ஏகப்பட்ட மீம்ஸ்கள் எல்லாம் வந்தன. அதை அவர் கடந்து போனாலும் ஒருகட்டத்தில் இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எல்லை மீறி சென்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பிரியங்காவை அப்படி ட்ரோல் செய்ததே விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமியின் ரூட் கம்பெனிதான். அந்த நிறுவனத்தில்தான் பிரியங்கா இருந்ததாகவும்; சில காரணங்களால் அவர் வெளியேறியதால் அவரை டார்கெட் செய்தார்கள் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது.
பிரியங்கா பேட்டி: இந்நிலையில் தனக்கு நடந்த இணைய தாக்குதல்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "எனக்கு எதிராக இணையத்தில் வெறுப்பு பிரசாரம் நடந்திருக்கிறது. இன்று அனைவரும் அனைவரையும் ட்ரோல் செய்கிறார்கள். பழம்பெரும் நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவருமே ட்ரோலுக்கு சிக்கியிருக்கிறார்கள். என் விஷயத்திலும் அப்படி நடக்கத்தான் செய்தது. ஆனால் அந்த கடந்த காலத்துக்கு நான் திரும்பி செல்ல விரும்பவில்லை.
என்னை மாற்ற உதவியது: ஏனென்றால் அது ஒருவகையில் என்னை ஒரு நல்ல குணநலன் படைத்த மனிதராக மாற்றிக்கொள்ள உதவியது. அதிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா துறை நிச்சயமற்ற ஒரு துறை ஆகும். இங்கே யாருக்கும் எதுவும் நக்கலாம். ஒரு கடினமான காலகட்டம் வரும்போது அது நம்மை மேலும் உயர்த்தும் என்பது எனது நம்பிக்கை" என்றார். அவர், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷின் பெயரை குறிப்பிடாவிட்டாலும்; அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது ஜெகதீஷ்தான் என்பது அனைவரது கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications















