சிவகார்த்திகேயன் மீது பிரியங்கா மோகனுக்கு தனி பாசம்.. அவ்வளவு பூரிப்பு
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவர். அமரன் திரைப்படத்தின் வெற்றி அவரது மார்க்கெட்டை உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்றது. உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அடுத்ததாக சேயோன் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவருடன் டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா மோகன்; எஸ்கே குறித்து பூரிப்புடன் பேசியிருக்கிறார். அது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 350 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அதனையடுத்து எஸ்கேவின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. தொடர்ந்து நடித்த டாக்டர், பராசக்தி படங்கள் சுமார் வரவேற்பை பெற்றன. ஆனால் பராசக்தி திரைப்படம் அமரன் திரைப்படத்தின் ரெக்கார்டை உடைக்கும் என்று கணிக்கப்பட்டது. படமோ பயங்கரமாக சொதப்பி 100 கோடி ரூபாய் வசூலோடு நின்றுகொண்டது.

அடுத்த படம்: அடுத்ததாக அவர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன்படத்தில் நடித்துவருகிறார். தாய் கிழவி படத்தின் கதை சொன்னபோதே சிவக்குமாரால் இம்ப்ரெஸ் ஆகி படத்தில் கமிட்டாகிவிட்டார். இந்தப் படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்திலும் சிவக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வெங்கட் பிரபுவுடன் இணையவிருந்த படம் ட்ராப்பாகிவிட்டது. எனவே எஸ்கே - வெங்கட் கூட்டணியை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
பிரியங்கா மோகன் பேட்டி: இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் அனுஹாசனுக்கு கொடுத்த பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "அவர் சிறந்த பயணத்தை கொண்டிருக்கிறார். அவரை நான் பாராட்ட வேண்டும். இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார் என்பது முக்கியம்" என்றார். அவரது இந்தப் பேட்டி எஸ்கே ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது. மேலும், சிவா மீது பிரியங்காவுக்கு இவ்வளவு பாசமா எனவும் பூரித்து போயிருக்கிறார்கள்.
இரண்டு பேரும் சூப்பர் ஜோடி: பிரியங்கா மோகன் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான முதல் படமே சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த டாக்டர் படம்தான். அந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியது. அதனையடுத்து டான் திரைப்படமும் மெகா ஹிட்டாகி 100 கோடி க்ளப்பில் சேர்ந்தது. இப்படி சூப்பர் ஜோடியாக அவர்கள் வலம் வருகிறார்கள். பிரியங்காவை பொறுத்தவரை கடைசியாக மேட் இன் கொரியா திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
