Priyanka Mohan: பல ஹீரோக்களுக்கு ஓகே சொன்ன பிரியங்கா மோகன்... என்ன லிஸ்ட் போய்கிட்டே இருக்கு!

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் ப்ரியங்கா மோகனும் லீடிங் ரோலில் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ப்ரியங்கா மோகன், இப்போது முன்னணி ஹீரோக்களின் ஃபேவரைட் நாயகியாக மாறிவிட்டார். இந்நிலையில், அவர் சொன்ன ஒரு நடிகர்கள் லிஸ்ட் திரையுலகில் செம்ம வைரலாகி வருகிறது.

பிரியங்கா மோகன் சொன்ன ஹீரோக்கள் லிஸ்ட்
இந்தாண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படங்கள் வெளியாகின. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் லீடிங் ரோலில் நடித்திருந்தார். ஆனாலும் அவரது கேரக்டருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை.

 Priyanka Mohan: Priyanka Mohan wants to act with Leading Heroes in all languages

சமஸ்தானத்தில் இருந்து வெளியேறும் பிரியங்கா மோகன் பின்னர் விடுதலை போராளியாக மாறினாலும், அதில் அவரது நடிப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முன்னதாக பிரியங்கா மோகன் தனுஷின் ஜோடியாக நடித்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கேப்டன் மில்லர் ப்ரொமோஷனில் பேசியிருந்த பிரியங்கா மோகன், சில ஹீரோக்களின் லிஸ்ட்டை வெளியிட்டு ஹைப் கொடுத்துள்ளார்.

கன்னடத்தில் 2019ம் ஆண்டு வெளியான 'ஓந்த் கதே ஹெல்லா' என்ற படத்தில் அறிமுகமான பிரியங்கா மோகன், பின்னர் தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழிலும் என்ட்ரி கொடுத்த பிரியங்கா மோகன், இப்போது கோலிவுட்டிலேயே பிஸியாகிவிட்டார். எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா ஜோடியாகவும், டான் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடனும் நடித்திருந்தார்.

 Priyanka Mohan: Priyanka Mohan wants to act with Leading Heroes in all languages

அதனைத் தொடர்ந்தே தற்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார் பிரியங்கா மோகன். இதனையடுத்து தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படத்திலும், தமிழில் ப்ரதர் என்ற படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் நடித்து வருகிறார். இவர்கள் இல்லாமல் வேறு எந்த ஹீரோக்களுடன் நடிக்க ஆசை என கேப்டன் மில்லர் ப்ரொமோஷனில் பிரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், கார்த்தி, தெலுங்கில் மகேஷ் பாபு, பிரபாஸ், ராம் சரண் ஆகியோருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல், கன்னடத்தில் கேஜிஎஃப் ஹீரோ யாஷ், ரக்‌ஷித் ஷெட்டி எனக் கூறியுள்ளார். இவர்களில் ரக்‌ஷித் ஷெட்டியை தான் ரொம்ப பிடிக்கும் என்றுள்ள பிரியங்கா மோகன், மலையாளத்தில் ஃபஹத் பாசில், துல்கர் சல்மான் ஆகியோருடன் ஜோடி சேர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X