பி.சி.ஸ்ரீராம் யார் என்றே எனக்கு தெரியாது?.. பிரியங்கா மோகன் இப்படி சொல்லிருக்காங்களே

சென்னை: நடிகை பிரியங்கா மோகன் கோலிவுட், டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேட் இன் கொரியா திரைப்படம் ஃபீல் குட் படம் என்ற பெயரை பெற்றது. அடுத்ததாக சிம்புவுடன் அரசன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதனை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.

தமிழில் டாக்டர் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. முதல் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு அடுத்ததாகவும் எஸ்கேவுக்கு ஜோடியாக டான் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் ஹிட்டாகி 100 கோடி ரூபாயை அள்ளியது. இப்படி அறிமுகமான சில படங்களிலேயே 100 கோடி க்ளப் ஹீரோயினாக ஜொலித்தார்.

Priyanka Mohan Recalls Meeting PC Sreeram He Said There s Something in Me
Photo Credit:

முன்னணி நடிகர்களுடன்: வரிசையான வெற்றிகளுக்கு பிறகு அவருக்கான மார்க்கெட்டும் கோலிவுட்டில் அதிகரித்தது. அதன்படி சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன், தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர். ரவி மோகனுக்கு ஜோடியாக பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் எப்படி பிஸியாக இருக்கிறாரோ அதேபோல்தான் தெலுங்கிலும், அங்கே நானி, பவன் கல்யாணுக்கு எல்லாம் ஜோடியாக நடித்துவிட்டார். அவர் வரிசையாக பல படங்கள் நடித்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட்டாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து.. பிரியங்கா மோகன் நெகிழ்ச்சியாக பதிவு!
குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து.. பிரியங்கா மோகன் நெகிழ்ச்சியாக பதிவு!

ஓடிடியில் பிரியங்கா: இத்தனை நாட்கள் நேரடியாக தியேட்டரில் ரிலீஸாகும் படங்களில் மட்டும்தான் நடித்துவந்தார். திடீரென புது முடிவை எடுத்து ஓடிடியில் ரிலீஸான மேட் இன் கொரியா படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஹீரோவென யாரும் இல்லை. அது ஹீரோயின் சப்ஜெக்ட் ஆகும். படம் ஃபீல் குட்டாக இருந்தது என்ற பெயரை பெற்றது. பிரியங்காவின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது என்று ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள் ரசிகர்கள். அந்தப் படம் வெற்றியடைந்ததில் அவருக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும்.

அடுத்த படம்: அடுத்ததாக அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் அரசன் படத்தில் நடித்துவருகிறார். முதன்முறையாக வெற்றியின் இயக்கத்தில் நடிப்பதால் இப்படத்தின் மீது ரொம்பவே ஆவலை வைத்திருக்கிறார். ஷூட்டிங்கிலும் நன்றாகவே ஒத்துழைப்பு கொடுப்பதாகவும்; அவரது கரியரில் இந்தப் படம் முக்கியமான இடத்தை பெறும் என்றும் அடித்து சொல்கிறார்கள் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

பிரியங்கா மோகன் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "ஒருமுறை பி.சி.ஸ்ரீராம் அலுவலகத்துக்கு வர சொன்னார்கள். எனக்கு அவரை யார் என்றே தெரியவில்லை. அவரது அலுவலகத்துக்கு சென்று அமர்ந்திருந்தேன். அப்போது அவர் பட போஸ்டர்கள் எல்லாம் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்தேன். அனைத்தும் என்னுடைய ஃபேவரைட் படங்கள். நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை. பிறகு அவர் யார் என்று கூகுள் செய்து பார்த்தேன். அப்போது பார்த்து சரியாக அவரும் வந்துவிட்டார். வந்ததும் என்னை பார்த்து இவங்கள கமிட் செய்யலாம். இந்தப் பெண்ணுக்குள் ஏதோ இருக்கிறது என கூறினார். என்னை சில புகைப்படங்கள் எடுத்தார்" என்றார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X