கீர்த்தி சுரேஷ் ரூட்டை ஃபாலோ செய்யும் பிரியங்கா மோகன்.. நடிகையின் ஆசையே அதுதானாம்
சென்னை: கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு திரைத்துறைகளில் படு பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக மாறியிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். கடைசியாக அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஓஜி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தமிழிலும் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. மேலும் திரைப்படங்கள் மட்டுமின்றி தற்போது வெப் சீரிஸிலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்த வகையில் Made in korea என்ற இணைய தொடர் அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது.
பொறியாளரான பிரியங்கா மோகன் கன்னட திரையுலகத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். அங்கு அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகமான பிறகுதான் அடையாளப்பட்டார். அந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். படம் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. முக்கியாக பிரியங்காவின் அழகும், எக்ஸ்ப்ரெஷன் என அத்தனையும் க்யூட்டாக இருந்தது என்று படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்போதிருந்தே அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

பிஸியான நடிகையாக மாறிய பிரியங்கா: டாக்டர் படத்தின் வெற்றி அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தன. அதன்படி மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு டான் படத்தில் ஜோடியானார். அந்தப் படமும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை அள்ளியது. மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன், தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி அசத்தினார். ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் தோல்வியையே சந்தித்தன. இருந்தாலும் பிரியாங்காவின் மார்க்கெட் ஆட்டம் காணவில்லை.
நட்புக்காக நடனம்: ஹீரோயினாக மட்டும் நடிப்பார் என்று நினைத்திருந்த நிலையில் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமக ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடவும் செய்தார். தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட நட்பின் காரணமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு சூப்பர் ஆட்டம் போட்டு ட்ரெண்டானார். அனைவரும் அவரது நடனத்தை ரசித்தார்கள்.
பவன் கல்யாணுக்கு ஜோடி: கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் பிஸி ஆர்ட்டிஸ்ட்தான் பிரியங்கா. நானிக்கு ஜோடியாக நடித்த சரிபோதா சனிவாரம் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதேபோல் கடைசியாக அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஓஜி படத்திலல்நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான ஹிட்டடித்திருந்தாலும் பவன் கல்யாணுடனான கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. சில நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார். அது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் கிளாமர், நெருக்கமான காட்சிகளை பெரும்பாலும் தவிர்ப்பவர் பிரியங்கா.
வெப் சீரிஸில்: இதுவரை திரைப்படங்களில் மட்டும் நடித்துவந்த அவர் இப்போது வெப் சீரிஸ்களிலும் கமிட்டாகியிருக்கிறார். அதன்படி நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மேட் இன் கொரியா அடுத்த மாதம் ஸ்ட்ரீமாகிறது. திரைப்படங்களில் கிடைத்த வரவேற்பு போன்றே கண்டிப்பாக வெப் சீரிஸிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது அந்த நிகழ்ச்சியில் அவரிடம் யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை என கேட்கப்பட்டது. அதற்கு, 'மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை' என குறிப்பிட்டார். முன்னதாக கீர்த்தி சுரேஷ், டாப்ஸி போன்றோர் பயோபிக்கில் நடித்திருகிறார்கள். அவர்கள் வரிசையில் பிரியங்கா மோகனும் விரைவில் இணைவாரா என்பதை பார்ப்போம்.


Click it and Unblock the Notifications















