Priyanka Mohan - உடலை காட்டி நடிப்பதா?.. கிளாமர் ரோல் பற்றி பிரியங்காமோகன் அதிரடி கருத்து

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. இந்த சூழலில் அவர் நடிப்பதற்கு முதலில் கமிட்டான டிக் டாக் படம் பற்றிய சர்ச்சையில் பிரியங்காவின் பெயர் பலமாகவே அடிபட்டது. தற்போது கிளாமர் ரோல் பற்றி அவர் பேசியிருக்கிறார்.

கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அடிப்படையில் பொறியாளரான இவர் அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்ததால் திரைத்துறை கதவு திறந்தது. முதல் படத்தை விக்ரம் குமார் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் பிரியங்கா மோகனின் நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.

Priyanka Mohan Talks about Glamour Roles at Recent Interview

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.

பிஸி பிரியங்கா: டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். இப்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிக் டாக்: இதற்கிடையே தமிழில் அவர் நடிப்பில் டாக்டர் படம் முதலில் வெளியானாலும் அதற்கு முன்னதாகவே டிக் டாக் என்ற படத்தில் கமிட்டாகி நடித்துவிட்டார் என கூறப்படுகிறது. அந்தப் படமானது கடந்த மாதம் வெளியானது. அதன் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் இருந்தது. ஏனெனில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன்; டிக் டாக் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். அது பெரும் பேசுபொருளானது.

கிளாமர் பற்றி கருத்து: அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் பிரியங்கா மோகனின் நடிப்பு பாராட்டை பெற்றது. இந்நிலையில் கிளாமர் ரோல் பற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஹீரோக்களுடன் நடிக்கும் சமயத்தில் வெறும் உடலை மட்டும் காட்டி நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரத்தில் நடிக்கவே நான் விரும்புகிறேன்"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X