மாஸ் மகாராஜாவுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்!
சென்னை: சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து வரும் பிரியங்கா மோகன் தெலுங்கில் மாஸ் மகாராஜா ரவிதேஜாவுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாக்டர் படத்தில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். இப்பொழுது மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்து வருகிறார்
சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து வரும் பிரியங்கா மோகன் தெலுங்கில் மாஸ் மகாராஜா ரவிதேஜாவுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தென்னிந்தியாவில் மவுசு அதிகரித்துள்ளது
தமிழ் சினிமாவில் தற்போதைய வரவாக களமிறங்கியுள்ள நடிகை பிரியங்கா மோகன் நடித்த ஒரே திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்க் லீடர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவருக்கு இப்போது தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் மவுசு அதிகரித்துள்ளது.
அந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியான டாக்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவருக்கு இப்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
அலட்டி கொள்ளாத க்யூட்டான நடிப்பு அசர வைக்கும் நடனம் என தமிழ் சினிமாவில் அதிரடியாக களம் இறங்கியுள்ள இவர் டாக்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் கல்லூரி பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் சூரி,சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்து வருகின்றனர்

எதற்கும் துணிந்தவன்
டாக்டர் மற்றும் டான் என சிவகார்த்திகேயன் உடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்த பிரியங்கா மோகன் அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்தது வருவது தமிழ் திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

ரவிதேஜாவுக்கு ஜோடியாக
இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகன் தெலுங்கில் மாஸ் மகாராஜா ரவிதேஜாவுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுதீர் வர்மா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ராவணாசுரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜாதி ரத்னாலு ஃபரியா அப்துல்லாவும் முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











