பார்வையில் போதை ஏற்றும் ப்ரியங்கா மோகன்.. அசத்தலான ஃபோட்டோஷூட்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் பிரியங்காவின் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்தச் சூழலில் அவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அடிப்படையில் பொறியாளரான இவர் அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்ததால் திரைத்துறை கதவு திறந்தது. முதல் படத்தை விக்ரம் குமார் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் பிரியங்கா மோகனின் நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.
பிஸி பிரியங்கா: டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். கடைசியாக அவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிக் டாக்: இதற்கிடையே தமிழில் அவர் நடிப்பில் டாக்டர் படம் முதலில் வெளியானாலும் அதற்கு முன்னதாகவே டிக் டாக் என்ற படத்தில் கமிட்டாகி நடித்துவிட்டார் என கூறப்படுகிறது. அந்தப் படமானது கடந்த வருடம் வெளியானது. அதன் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் இருந்தது. ஏனெனில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன்; டிக் டாக் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். அது பெரும் பேசுபொருளானது. ஆனால் அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை.
ஃபோட்டோ ஷூட்: இந்நிலையில் ப்ரியங்கா மோகன் ஃபோட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகின்றன. சூழல் இப்படி இருக்க இப்போது புதிய ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் அவர். அதில் அவர் ஊதா நிற உடை அணிந்து சோபாவில் படுத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பார்வையிலேயே போதை ஏற்றுகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றன.


Click it and Unblock the Notifications











