ப்ரியங்கா சோப்ரா ரூ. 18 கோடிக்கு விற்ற புகைப்படங்கள் இது தான் பாஸ்
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து நேற்று டெல்லியில் அவர்களின் திருமண வரேவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.
புகைப்படம்
ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸின் திருமணம் முடிந்த கையோடு அவர்களின் புகைப்படங்கள் வெளியாகவில்லை. காரணம் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகை ஒன்று அவர்களின் திருமண புகைப்படங்களின் உரிமையை ரூ. 18 கோடிக்கு வாங்கியிருந்தது. இந்நிலையில் அந்த பத்திரிகை ப்ரியங்கா, நிக் திருமண புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
ப்ரியங்கா
அந்த பத்திரிகை புகைப்படங்களை வெளியிட்ட பிறகு ப்ரியங்கா தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கிறிஸ்தவ முறை திருமணத்தின்போது அவர் அணிந்திருந்த உடை மிகவும் அழகாக இருந்தது.
டிசைனர் உடை
இந்து முறைப்படி நடந்த திருமணத்தின்போது ப்ரியங்கா சிவப்பு நிற டிசைனர் உடை அணிந்திருந்தார். அந்த உடையை பார்த்தவர்களால் புகழாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அழகோ அழகு.

கிண்டல்
ப்ரியங்கா தனது திருமணத்திற்காக காசை தண்ணீராக செலவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் தனது திருமண புகைப்படங்களின் உரிமையை ரூ. 18 கோடிக்கு விற்பனை செய்தது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. திருமணம் செய்து இப்படியும் சம்பாதிக்கலாமா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











