நீங்க "குளிங்க", நாங்க குளிக்க மாட்டோம்.. பிரியங்கா, பமீலா, சோனம் அடம்!

By Sudha

மும்பை: சபரிமலைக்கு மாலை போடுவது ஒரு காலத்தில் பக்தி மயமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அது கிட்டத்தட்ட ஒரு பேஷன் போலாகி விட்டது. சபரிமலை சீசனின்போது யாரைப் பார்த்தாலும் மலைக்குப் போகிறேன் என்று வழக்கமாகி விட்டது. அதேபோலத்தான் ஐஸ் பக்கெட் சவாலும். கிட்டத்தட்ட யாரைப் பார்த்தாலும் நான் குளிச்சிட்டேன். நீங்க குளிச்சிட்டீகளா என்று கேட்க ஆரம்பித்து விட்டனர்.

உலகப் பிரபலங்கள் பலரும் இந்த ஐஸ் பக்கெட் சவாலில் பங்கேற்று இதை மேலும் பிரபலமாக்கி விட்டனர். ஆனாலும் சில பிரபலங்கள் ஸாரி, இதுக்கெல்லாம் நாங்க வரலை என்று கூறியுள்ளனர். அந்த பிரபலங்கள் வரிசையில் லேட்டஸ்டாக நம்ம ஊர் பிரியங்கா சோப்ராவும் சேர்ந்துள்ளார்.

இவரைப் போலவே நம்ம ஊரைச் சேர்ந்த மேலும் சில பிரபலங்களும் கூட இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று ஏற்கனவே கூறியிருப்பது நினைவிருக்கலாம்.

அது எதுக்கு ஐஸ் பக்கெட் குளியல்....

அது எதுக்கு ஐஸ் பக்கெட் குளியல்....

எலும்புகளை உறைய வைக்கும் குளிருடன் கூடிய ஐஸ் வாட்டரில் குளிப்பதுதான் இந்த சவாலாகும். இது எதற்காக வந்தது என்றால் அமியோடிராபிக் லேட்டரல் ஸ்கிளிரோசிஸ் என்று கூறப்படும் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே. இந்த நோய் வந்தால் அது மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள நரம்பு செல்களைப் பாதித்து நம்மை முடக்கிப் போட்டு விடும்.

பிரபலங்களின் குளியல்

பிரபலங்களின் குளியல்

இதில் உலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு குளியல் போட்டனர். ஜார்ஜ் புஷ் உள்பட பலரும் கலந்து கொண்டனர். டாம் குரூஸ், ராபர்ட் பேட்டின்சன், நிக்கோல் கிட்மேன் போன்றோர் கலந்து கொண்டனர்.

பிபாஷா பாசுவும், ஹன்சிகா மோத்வானியும்

பிபாஷா பாசுவும், ஹன்சிகா மோத்வானியும்

இந்தியாவிலும் இது பிரபலமானது. பிபாஷா பாசு, ஹன்சிகா மோத்வானி, சானியா மிர்ஸா, அபிஷேக் பச்சன் என பலரும் குளியல் போட்டனர்.

ஸாரி..

ஸாரி..

ஆனால் இந்தக் குளியலை நிராகரித்துள்ளோரும் உள்ளனர். அதில் இப்போது பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார். என்னை இந்தக் குளியலுக்கு அழைத்த அனைவருக்கும் நன்றி. ஆனால் இதில் நான் பங்கேற்கவில்லை என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார் பிரியங்கா.

ஏன் குளிக்க மாட்டாராம்

ஏன் குளிக்க மாட்டாராம்

தனது டிவிட்டில் ஒரு இணைப்பையும் சேர்த்துள்ளார் பிரியங்கா. அது ஆஸ்திரேலியாவின் செய்தி வாசிப்பாளர் லிங்கன் ஹம்ப்ரீஸ் எழுதிய கட்டுரையின் இணைப்பாகும். அதில் லிங்கன் கூறியுள்ளார்... ஐஸ் பக்கெட் குளியலின் நோக்கம் நல்லதுதான். நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த நோயை விட அதி பயங்கரமான புற்றுநோய், நல்ல குடிநீர் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படும் அவலம் ஆகியவை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார்.

பமீலாவும் மறுப்பு

பமீலாவும் மறுப்பு

ஏற்கனவே பமீலா ஆண்டர்சனும் கூட இந்தக் குளியலுக்கு மறுத்திருந்தார். அவர் கூறிய காரணம், இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிறுவனம் விலங்குகள் மீது பரிசோதனை நடத்துவதால் அதை நான் ஆதரிக்க முடியாது என்று கூறியிருந்தார் பமீலா.

சோனம் கபூரும் மறுப்பு

சோனம் கபூரும் மறுப்பு

அதேபோல, நடிகை சோனம் கபூரும் குளிக்க மறுத்திருந்தார். தண்ணீரை வீணடிக்க நான் விரும்பவில்லை. தண்ணீர்தான் அனைத்துக்கும் முக்கியமான மூலாதாரம் என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X