ப்ரியங்கா தெரிந்து செய்தாரா, தெரியாமால் செய்தாரா?: ஆனால் ஒர்க்அவுட் ஆகிடுச்சு

By Siva

Recommended Video

ஆடை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா- வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா பேச்சுலர் பார்ட்டிக்கு அணிந்திருந்த கவுனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார்.

இந்நிலையில் நியூயார்க் நகரில் பேச்சுலர் பார்ட்டி நடந்தது. அந்த பார்ட்டிக்கு ப்ரியங்காவின் தோழிகள் ஏற்பாடு செய்தனர்.

 ப்ரியங்கா

ப்ரியங்கா

பேச்சுலர் பார்ட்டிக்கு ப்ரியங்கா ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்திருந்தார். திருமணத்திற்கு அணிவது போன்ற கவுனை அணிந்திருந்தார். அந்த கவுன் அழகாக தான் இருந்தது. ஆனால் அவர் பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனின் மனைவி ஜார்ஜினா வடிவமைத்த உடையை அணிந்திருந்தார். ஜார்ஜினா வெயின்ஸ்டீனை பிரிந்து வாழ்கிறார். வெயின்ஸ்டீனை விவாகரத்து செய்யப் போவதாக அவர் கடந்த ஆண்டு அறிவித்தார்.

உடை

உடை

ஏன், இந்த ப்ரியங்கா சோப்ராவுக்கு வேறு டிசைனரே கிடைக்கவில்லையா, போயும் போயும் வெயின்ஸ்டீன் மனைவி வடிவமைத்த கவுனை தான் அணிய வேண்டுமா என்று விமர்சனம் எழுந்தது. இதை பார்த்த ப்ரியங்கா சோப்ராவோ, தான் சரியான உடையை தான் அணிந்ததாக கூறியுள்ளார். ஜார்ஜினா என் தோழி. அவர் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது அவரை தரக்குறைவாக பேசுவது சரியில்லை என்கிறார் ப்ரியங்கா.

 ஆதரவு

ஆதரவு

ஒரு பெண்ணாக ஜார்ஜினாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். ஜார்ஜினா வடிவமைத்த உடையில் ஒரு இளவரசி போன்று உணர்ந்தேன். என் சாய்ஸ் சரியாகத் தான் உள்ளது. எனக்கு ஜார்ஜினாவை பல ஆண்டுகளாக தெரியும். அவர் கடின உழைப்பாளி என்று ஜார்ஜினாவுக்காக பரிந்து பேசியுள்ளார் ப்ரியங்கா.

 பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

ஏற்கனவே ப்ரியங்காவின் பேச்சலர் பார்ட்டி புகைப்படங்கள் வைரலாகி அனைவரையும் தன்னை கவனிக்க வைத்துவிட்டார். இந்நிலையில் டிசைனர் ஜார்ஜினாவால் விமர்சனத்திற்குள்ளாகி மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். எது செய்தாலும் மக்கள் தன்னை பற்றியே பேசும்படி செய்கிறார் ப்ரியங்கா சோப்ரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X