15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் அஜித் ஹீரோயின்

By Siva

Recommended Video

15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் அஜித் ஹீரோயின் ப்ரியங்கா த்ரிவேதி-வீடியோ

சென்னை: அஜித் பட ஹீரோயின் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.

ராஜா படத்தில் அஜித்தின் காதலியாக நடித்தவர் ப்ரியங்கா த்ரிவேதி. காதல் சடுகுடு படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார். கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் ஜனனம். இந்நிலையில் மகத் ராகவேந்திரா, யாஷிகா நடிக்கும் த்ரில்லர் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வருகிறார் அவர். இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழ்

தமிழ்

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கடந்த வாரம் வந்தது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த படம் சுவாரஸ்யமாக உள்ளது. இது தமிழ்-கன்னட மொழிகளில் வெளியாவதால் நான் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளேன். நான் கன்னடம் மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தமிழ் படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருவதில் மகிழ்ச்சி.

ப்ரியங்கா

ப்ரியங்கா

என் கதாபாத்திரம் பற்றிய விபரங்களை என்னால் கூற முடியாது. விபரங்களை தெரிவித்தால் சஸ்பென்ஸ் போய்விடும். என் கதாபாத்திரம் முக்கியமானது மற்றும் ஸ்பெஷலானது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்.

அஜித்

அஜித்

நான் தமிழில் அஜித், விக்ரம் ஆகிய டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். ஆனால் என் கெரியர் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டேன். திருமணமான கையோடு குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். அவர்களை பார்த்துக் கொள்வதில் பிசியாகிவிட்டேன். மீண்டும் நடிக்க வருவேன் என்று நினைக்கவில்லை.

சென்னை

சென்னை

முதலில் பெங்காலி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன, பின்னர் கன்னட பட வாய்ப்புகள் கிடைத்தது. என் திருமணத்திற்கு பிறகு நான் சென்னைக்கு வந்தது இல்லை. நான் மீண்டும் நடிக்கத் துவங்கியது கோலிவுட்காரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். எனக்கு தமிழ் புரியும், கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன் என்றார் ப்ரியங்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X